66. அதற்கு அந்த மக்களிலிருந்த நிராகரித்தவர்களின் தலைவர்கள் (அவரை நோக்கி) ‘‘நிச்சயமாக நாம் உம்மை மடமையில் (ஆழ்ந்து) கிடப்பவராகவே காண்கிறோம். நிச்சயமாக நாம் உம்மை பொய்யர்களில் ஒருவரெனவே கருதுகிறோம்'' என்று கூறினார்கள்.
الترجمة التاميلية
قَالَ ٱلۡمَلَأُ ٱلَّذِينَ كَفَرُواْ مِن قَوۡمِهِۦٓ إِنَّا لَنَرَىٰكَ فِي سَفَاهَةٖ وَإِنَّا لَنَظُنُّكَ مِنَ ٱلۡكَٰذِبِينَ
அவருடைய சமூகத்தாரில் நிராகரித்தவர்களின் தலைவர்கள், (அவரை நோக்கி) "நிச்சயமாக நாங்கள் உம்மை மடமையில் (மூழ்கிக்கிடப்பவராகவே) காண்கின்றோம்; மேலும் நிச்சயமாக நாம் உம்மைப் பொய்யர்களில் ஒருவராகக் கருதுகிறோம்" என்று கூறினார்கள்.
Jan Trust Foundation - Tamil translation
அவருடைய சமுதாயத்தில் நிராகரித்த தலைவர்கள் “நிச்சயமாக நாம் உம்மை மடமையில் காண்கிறோம். நிச்சயமாக நாம் உம்மை பொய்யர்களில் (ஒருவராக) எண்ணுகிறோம்”என்று கூறினர்.
الترجمة التاميلية - عمر شريف