116. ‘‘அல்லாஹ் (தனக்கு) சந்ததி ஏற்படுத்திக் கொண்டான்'' என்றும் கூறுகின்றனர். அவ்வாறல்ல; அவனோ மிக்க பரிசுத்தமானவன். வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்தும் அவனுக்குரியனவே! இவை அனைத்தும் அவனுக்குக் கீழ்ப்படிந்து நடக்கின்றன(வே தவிர சந்ததியாக ஆகக்கூடிய தகுதியில் எந்த ஒன்றுமே இல்லை).
الترجمة التاميلية
وَقَالُواْ ٱتَّخَذَ ٱللَّهُ وَلَدٗاۗ سُبۡحَٰنَهُۥۖ بَل لَّهُۥ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۖ كُلّٞ لَّهُۥ قَٰنِتُونَ
இன்னும் கூறுகிறார்கள்; "அல்லாஹ் ஒரு குமாரனைப் பெற்றிருக்கிறான்" என்று. அப்படியல்ல - அவன் (இவர்கள் கூறுவதிலிருந்து) மிகத் தூய்மையானவன்; வானங்கள், பூமியில் உள்ளவை யாவும் அவனுக்கே உரியவை. இவையனைத்தும் அவனுக்கே அடிபணிந்து வழிபடுகின்றன.
Jan Trust Foundation - Tamil translation
"அல்லாஹ் சந்ததியை எடுத்துக் கொண்டான்'' என்று கூறுகின்றனர். - அவனோ மிகப் பரிசுத்தமானவன் - மாறாக, வானங்களிலும் பூமியிலும் உள்ளவை (அனைத்தும்) அவனுக்குரியனவே! அவனுக்கு எல்லோரும் பணிந்தவர்கள்.
الترجمة التاميلية - عمر شريف