118. மேலும், கல்வி (அறிவு) இல்லாதோர் ‘‘அல்லாஹ் நம்முடன் (நேரடியாகப்) பேச வேண்டாமா? அல்லது (எழுதப்பட்ட) ஒரு வசனம் (நேராக) நமக்கு வரவேண்டாமா?'' எனக் கேட்கின்றனர். இவர்கள் கேட்டது போன்றே இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (மூஸாவிடம்) கேட்டார்கள். (அவர்களுடைய உள்ளங்களை) இவர்களுடைய உள்ளங்கள் ஒத்திருக்கிறேன். (உண்மையை) நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நம் அத்தாட்சிகளை நிச்சயமாக நாம் தெளிவாக்கி இருக்கிறோம்.
الترجمة التاميلية
وَقَالَ ٱلَّذِينَ لَا يَعۡلَمُونَ لَوۡلَا يُكَلِّمُنَا ٱللَّهُ أَوۡ تَأۡتِينَآ ءَايَةٞۗ كَذَٰلِكَ قَالَ ٱلَّذِينَ مِن قَبۡلِهِم مِّثۡلَ قَوۡلِهِمۡۘ تَشَٰبَهَتۡ قُلُوبُهُمۡۗ قَدۡ بَيَّنَّا ٱلۡأٓيَٰتِ لِقَوۡمٖ يُوقِنُونَ
இன்னும் அறியாதவர்கள் கூறுகிறார்கள்; "அல்லாஹ் ஏன் நம்மிடம் பேசவில்லை, மேலும், நமக்கு ஏன் அத்தாட்சி வரவில்லை?" என்று. இவர்களுக்கு முன்னர் இருந்தவர்களும் இப்படியே - இவர்களின் சொற்களைப்போலவே - தான் கூறினார்கள். இவர்களின் இதயங்கள் அவர்களுடைய இதயங்களைப் போன்றவையே தான். ஈமானில் உறுதியுடைய மக்களுக்கு நம் அத்தாட்சிகளை (அவர்கள் மனதில் பதியும்படி) நாம் நிச்சயமாகத் தெளிவாய் விவரித்துள்ளோம்.
Jan Trust Foundation - Tamil translation
அறியாதவர்கள், "அல்லாஹ் நம்முடன் பேச வேண்டாமா? அல்லது ஒரு வசனம் நமக்கு வரவேண்டாமா?'' எனக் கூறினார்கள். இப்படியே இவர்களுக்கு முன்னர் உள்ளவர்களும் இவர்களின் கூற்றைப் போன்றே கூறினார்கள். இவர்களுடைய உள்ளங்கள் (அனைத்தும் ஒன்றுக்கொன்று) ஒப்பாகிவிட்டன. (உண்மையை) உறுதி கொள்ளும் சமுதாயத்திற்கு வசனங்களை திட்டமாகத் தெளிவாக்கினோம்.
الترجمة التاميلية - عمر شريف