125. (மக்காவில் இப்றாஹீம் கட்டிய ‘கஅபா' என்னும்) வீட்டை மனிதர்கள் ஒதுங்கும் இடமாகவும், (அவர்களுக்கு) பாதுகாப்பு அளிக்கக்கூடியதாகவும் நாம் ஆக்கியிருக்கிறோம். (அதில்) இப்றாஹீம் நின்ற இடத்தை (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் தொழும் இடமாக வைத்துக் கொள்ளுங்கள். ‘‘(ஹஜ்ஜூ செய்ய அங்கு வந்து) அதை சுற்றுபவர்களுக்கும், தியானம் புரிய (அதில்) தங்குபவர்களுக்கும், குனிந்து சிரம் பணி(ந்து அதில் தொழு)பவர்களுக்கும் எனது அந்த வீட்டை சுத்தமானதாக ஆக்கி வையுங்கள்'' என்று இப்றாஹீமிடத்திலும் இஸ்மாயீலிடத்திலும் நாம் வாக்குறுதி வாங்கியிருக்கிறோம்.
الترجمة التاميلية
وَإِذۡ جَعَلۡنَا ٱلۡبَيۡتَ مَثَابَةٗ لِّلنَّاسِ وَأَمۡنٗا وَٱتَّخِذُواْ مِن مَّقَامِ إِبۡرَٰهِـۧمَ مُصَلّٗىۖ وَعَهِدۡنَآ إِلَىٰٓ إِبۡرَٰهِـۧمَ وَإِسۡمَٰعِيلَ أَن طَهِّرَا بَيۡتِيَ لِلطَّآئِفِينَ وَٱلۡعَٰكِفِينَ وَٱلرُّكَّعِ ٱلسُّجُودِ
(இதையும் எண்ணிப் பாருங்கள்; "கஃபா என்னும்) வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும் இன்னும், பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்;. இப்ராஹீம் நின்ற இடத்தை - மகாமு இப்ராஹீமை - தொழும் இடமாக நீங்கள் ஆக்கிக்கொள்ளுங்கள்" (என்றும் நாம் சொன்னோம்). இன்னும் 'என் வீட்டைச் சுற்றி வருபவர்கள், தங்கியிருப்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள் ஆகியோருக்காகத் தூய்மையாக அதனை வைத்திருக்க வேண்டும்' என்று இப்ராஹீமிடமிருந்தும், இஸ்மாயீலிடமிருந்தும் நாம் உறுதி மொழி வாங்கினோம்.
Jan Trust Foundation - Tamil translation
கஅபாவை மனிதர்களுக்கு ஒரு திரும்புமிடமாகவும், பாதுகாப்பாகவும் நாம் ஆக்கிய சமயத்தை நினைவு கூருங்கள். (அதில்) இப்ராஹீம் நின்ற இடத்தில் நீங்கள் தொழுமிடத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். "(அதை) தவாஃப் சுற்றுபவர்களுக்கும், (அல்லாஹ்வை வணங்க அதில்) தங்குபவர்களுக்கும், (தொழுகையில்) குனிபவர்களுக்கும், சிரம்பணிபவர்களுக்கும் என் வீட்டைச் சுத்தப்படுத்துங்கள்'' என்று இப்ராஹீமுக்கும் இஸ்மாயீலுக்கும் கட்டளையிட்டோம்.
الترجمة التاميلية - عمر شريف