137. (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் நம்பிக்கை கொண்டவாறே அவர்களும் நம்பிக்கை கொண்டால் நிச்சயமாக அவர்கள் நேரான வழியை அடைந்து விடுவார்கள். அவர்கள் புறக்கணித்து விட்டால் நிச்சயமாக வீண் பிடிவாதத்தில்தான் அவர்கள் இருக்கின்றனர். (நபியே!) அவர்களைப் பற்றி உமக்கு(ப் பயம் வேண்டாம்) அல்லாஹ் போதுமானவன். மேலும், அவன் (அனைத்தையும்) செவியுறுபவன், நன்கறிபவன் ஆவான்.
الترجمة التاميلية
فَإِنۡ ءَامَنُواْ بِمِثۡلِ مَآ ءَامَنتُم بِهِۦ فَقَدِ ٱهۡتَدَواْۖ وَّإِن تَوَلَّوۡاْ فَإِنَّمَا هُمۡ فِي شِقَاقٖۖ فَسَيَكۡفِيكَهُمُ ٱللَّهُۚ وَهُوَ ٱلسَّمِيعُ ٱلۡعَلِيمُ
ஆகவே, நீங்கள் ஈமான் கொள்வதைப்போல் அவர்களும் ஈமான் கொண்டால் நிச்சயமாக அவர்கள் நேர்வழியை பெற்றுவிடுவார்கள்;. ஆனால் அவர்கள் புறக்கணித்துவிட்டால் நிச்சயமாக அவர்கள் பிளவில்தான் இருக்கின்றனர். எனவே அவர்களி(ன் கெடுதல்களி)லிருந்து உம்மைக் காப்பாற்ற அல்லாஹ்வே போதுமானவன்;. அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், (எல்லாம்) அறிந்தோனுமாகவும் இருக்கிறான்.
Jan Trust Foundation - Tamil translation
(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் எதைக் கொண்டு நம்பிக்கை கொண்டீர்களோ அது போன்றே அவர்கள் நம்பிக்கை கொண்டால் திட்டமாக அவர்கள் நேர்வழி பெறுவார்கள். அவர்கள் (புறக்கணித்து) திரும்பினால் அவர்களெல்லாம் (வீண்) முரண்பாட்டிலில்தான் இருக்கின்றனர். ஆக, அவர்களிடமிருந்து அல்லாஹ் உம்மை பாதுகாப்பான். அவன் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன்.
الترجمة التاميلية - عمر شريف