140. ‘‘நிச்சயமாக இப்றாஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப் இவர்களும், இவர்களுடைய சந்ததிகளும் யூதர்களாக அல்லது கிறிஸ்தவர்களாக இருந்தார்கள் என கூறுவீர்களா? (இதை) நன்கறிந்திருப்பது நீங்களா? அல்லாஹ்வா? என்று (நபியே!) கேட்பீராக. மேலும், (இதைப்பற்றி) தன்னிடமிருக்கும் அல்லாஹ்வின் சாட்சியத்தை மறைப்பவனைவிடப் பெரிய அநியாயக்காரன் யார்? உங்கள் இச்செயலைப் பற்றி அல்லாஹ் பராமுகமாக இல்லை'' (என்றும் கூறுவீராக).
الترجمة التاميلية
أَمۡ تَقُولُونَ إِنَّ إِبۡرَٰهِـۧمَ وَإِسۡمَٰعِيلَ وَإِسۡحَٰقَ وَيَعۡقُوبَ وَٱلۡأَسۡبَاطَ كَانُواْ هُودًا أَوۡ نَصَٰرَىٰۗ قُلۡ ءَأَنتُمۡ أَعۡلَمُ أَمِ ٱللَّهُۗ وَمَنۡ أَظۡلَمُ مِمَّن كَتَمَ شَهَٰدَةً عِندَهُۥ مِنَ ٱللَّهِۗ وَمَا ٱللَّهُ بِغَٰفِلٍ عَمَّا تَعۡمَلُونَ
"இப்ராஹீமும், இஸ்மாயீலும், இஸ்ஹாக்கும், யஃகூபும், இன்னும் அவர்களுடைய சந்ததியினர் யாவரும் நீச்சயமாக யூதர்கள் அல்லது கிறிஸ்தவர்களே" என்று கூறுகின்றீர்களா? (நபியே!) நீர் கேட்பீராக "(இதைப் பற்றி) உங்களுக்கு நன்றாகத் தெரியுமா அல்லது அல்லாஹ்வுக்கா? அல்லாஹ்விடமிருந்து தன்பால் வந்திருக்கும் சாட்சியங்களை மறைப்பவனைவிட அநியாயக்காரன் யார்? இன்னும் அல்லாஹ் நீங்கள் செய்பவை பற்றி பராமுகமாக இல்லை."
Jan Trust Foundation - Tamil translation
"நிச்சயமாக இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப் (ஆகிய இவர்கள்) இன்னும் (இவர்களுடைய) சந்ததிகள் யூதர்களாக அல்லது கிறித்துவர்களாக இருந்தார்கள்'' எனக் கூறுகிறீர்களா? "(இதை) நீங்கள் மிக அறிந்தவர்களா? அல்லது அல்லாஹ்வா? என்று (நபியே) கூறுவீராக. (இதைப் பற்றி) தன்னிடத்திலிருக்கும் அல்லாஹ்வின் சாட்சியத்தை மறைத்தவரை விட மகா அநியாயக்காரர் யார்? நீங்கள் செய்வது பற்றி அல்லாஹ் கவனமற்றவனாக இல்லை.''
الترجمة التاميلية - عمر شريف