145. ஆகவே, (நபியே!) வேதம் கொடுக்கப்பட்ட (அ)வர்களிடம் (அவர்களை திருப்திபடுத்தக்கூடிய) அத்தாட்சிகள் அனைத்தையும் நீர் கொண்டுவந்த போதிலும் அவர்கள் உமது கிப்லாவைப் பின்பற்றப் போவதில்லை. நீரும் அவர்களுடைய கிப்லாவைப் பின்பற்றப் போவதில்லை. (வேதம் கொடுக்கப்பட்ட) அவர்களிலும் ஒருவர் மற்றொருவரின் கிப்லாவைப் பின்பற்றப் போவதுமில்லை. (ஆதலால், மக்காவை நோக்கித் தொழும்படி) உமது வஹ்யி(ன் மூலம் உத்தரவு) வந்ததன் பின்னரும் அவர்களுடைய விருப்பங்களை நீர் பின்பற்றினால் நிச்சயமாக நீரும் அநியாயக்காரர்களில் உள்ளவர்தான் (என்று கருதப்படுவீர்).
الترجمة التاميلية
وَلَئِنۡ أَتَيۡتَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ بِكُلِّ ءَايَةٖ مَّا تَبِعُواْ قِبۡلَتَكَۚ وَمَآ أَنتَ بِتَابِعٖ قِبۡلَتَهُمۡۚ وَمَا بَعۡضُهُم بِتَابِعٖ قِبۡلَةَ بَعۡضٖۚ وَلَئِنِ ٱتَّبَعۡتَ أَهۡوَآءَهُم مِّنۢ بَعۡدِ مَا جَآءَكَ مِنَ ٱلۡعِلۡمِ إِنَّكَ إِذٗا لَّمِنَ ٱلظَّـٰلِمِينَ
வேதம் கொடுக்கப்பட்டவர்களிடம் நீர் எல்லாவிதமான அத்தாட்சிகளையும் கொண்டுவந்த போதிலும் அவர்கள் உம் கிப்லாவைப் பின்பற்ற மாட்டார்கள்;. நீரும் அவர்களுடைய கிப்லாவைப் பின்பற்றுபவர் அல்லர்;. இன்னும் அவர்களில் சிலர் மற்றவர்களின் கிப்லாவைப் பின்பற்றுபவர்களும் அல்லர்;. எனவே (இதைப் பற்றிய) ஞானம் உமக்குக் கிடைத்த பின் நீர் அவர்களுடைய விருப்பங்களைப் பின்பற்றி நடப்பீராயின், நிச்சயமாக நீர் அநியாயக்காரர்களில் ஒருவராக இருப்பீர்.
Jan Trust Foundation - Tamil translation
(நபியே!) வேதம் கொடுக்கப்பட்டவர்களிடம் எல்லா அத்தாட்சியை (களை)யும் நீர் கொண்டு வந்தாலும் அவர்கள் உமது கிப்லாவைப் பின்பற்றமாட்டார்கள். நீரும் அவர்களின் கிப்லாவைப் பின்பற்றுபவராக இல்லை. அவர்களிலும் சிலர் சிலரின் கிப்லாவைப் பின்பற்றுபவராக இல்லை. உமக்குக் கல்வி வந்த பின்னர் அவர்களுடைய விருப்பங்களை நீர் பின்பற்றினால் அப்போது நிச்சயமாக நீர் அநியாயக்காரர்களில் உள்ளவர்தான்.
الترجمة التاميلية - عمر شريف