178. நம்பிக்கையாளர்களே! கொலை செய்யப்பட்டவர்களுக்காக பழிவாங்குவது உங்கள்மீது கடமையாக்கப்பட்டுள்ளது. (ஆகவே, கொலைசெய்யப்பட்டவன்) சுதந்திரமானவனாயின் (அவனை கொலை செய்த) சுதந்திரமானவனையே, (கொலை செய்யப்பட்டவன்)அடிமையாயின் (அவனை கொலை செய்த அந்த) அடிமையையே, (கொலை செய்யப்பட்டவள்) பெண்ணாயின் (கொலை செய்த அந்தப்) பெண்ணையே நீங்கள் கொலை செய்துவிடுங்கள். (ஆயினும், பழிவாங்கும் விஷயத்தில்) ஒரு சிறிதேனும் அ(க்கொலையுண்ட)வனுடைய சகோதரரால் மன்னிக்கப்பட்டுவிட்டால், மிக்க கண்ணியமான முறையைப் பின்பற்றி (அவனைக் கொலை செய்யாது விட்டு) விடவேண்டும். (பழிவாங்குவதற்குப் பதிலாகக் கொலையாளி ஒரு தொகையைத் தருவதாக ஒப்புக் கொண்டிருந்தால், அந்த நஷ்டஈட்டைத்) தயக்கமின்றி நன்றியோடு அவன் செலுத்திவிட வேண்டும். இ(வ்வாறு நஷ்டஈட்டை அனுமதித்திருப்ப)து உங்கள் இறைவனுடைய சலுகையும், அருளுமாகும். இ(வ்வாறு நஷ்ட ஈட்டைப் பெற்றுக் கொண்ட)தற்குப் பின் எவரேனும் வரம்பு மீறி (நஷ்டஈடு கொடுத்த கொலையாளியைத் துன்புறுத்தி)னால் அவனுக்கு (மறுமையில்) மிக்க துன்புறுத்தும் வேதனையுண்டு.
الترجمة التاميلية
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ كُتِبَ عَلَيۡكُمُ ٱلۡقِصَاصُ فِي ٱلۡقَتۡلَىۖ ٱلۡحُرُّ بِٱلۡحُرِّ وَٱلۡعَبۡدُ بِٱلۡعَبۡدِ وَٱلۡأُنثَىٰ بِٱلۡأُنثَىٰۚ فَمَنۡ عُفِيَ لَهُۥ مِنۡ أَخِيهِ شَيۡءٞ فَٱتِّبَاعُۢ بِٱلۡمَعۡرُوفِ وَأَدَآءٌ إِلَيۡهِ بِإِحۡسَٰنٖۗ ذَٰلِكَ تَخۡفِيفٞ مِّن رَّبِّكُمۡ وَرَحۡمَةٞۗ فَمَنِ ٱعۡتَدَىٰ بَعۡدَ ذَٰلِكَ فَلَهُۥ عَذَابٌ أَلِيمٞ
ஈமான் கொண்டோரே! கொலைக்காகப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது- சுதந்திரமுடையவனுக்குச் சுதந்திரமுடையவன்;, அடிமைக்கு அடிமை, பெண்ணுக்குப் பெண் இருப்பினும் (கொலை செய்த) அவனுக்கு அவனது (முஸ்லிம்) சகோதரனா(கிய கொலையுண்டவனின் வாரிசுகளா)ல் ஏதும் மன்னிக்கப்படுமானால், வழக்கமான முறையைப் பின்பற்றி (இதற்காக நிர்ணயிக்கப் பெறும்) நஷ்ட ஈட்டைக் கொலை செய்தவன் பெருந்தன்மையுடனும், நன்றியறிதலுடனும் செலுத்திவிடல் வேண்டும் - இது உங்கள் இறைவனிடமிருந்து கிடைத்த சலுகையும், கிருபையுமாகும்; ஆகவே, இதன் பிறகு (உங்களில்) யார் வரம்பு மீறுகிறாரோ, அவருக்குக் கடுமையான வேதனையுண்டு.
Jan Trust Foundation - Tamil translation
நம்பிக்கையாளர்களே! கொலை செய்யப்பட்டவர்களுக்காக பழிவாங்குவது உங்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது. (கொல்லப்பட்ட) சுதந்திரமானவனுக்குப் பதிலாக (கொலையாளியான) சுதந்திரமானவனை, (கொல்லப்பட்ட) அடிமைக்குப் பதிலாக (கொலையாளியான) அடிமையை, (கொல்லப்பட்ட) பெண்ணுக்குப் பதிலாக (கொலையாளியான) பெண்ணைத்தான் (கொல்ல வேண்டும்). எவருக்கு தன் சகோதரனிடமிருந்து (பரிகாரத் தொகையில்) ஏதேனும் மன்னிக்கப்பட்டால், கண்ணியமான முறையில் (அதைப்) பின்பற்றுதல் வேண்டும். நன்றி அறிதலுடன் (பரிகாரத் தொகையை) அவரிடம் நிறைவேற்றுதல் வேண்டும். இது உங்கள் இறைவனிடமிருந்து (வந்த) சலுகையும் அருளுமாகும். எவர் அதற்குப் பின்னர் வரம்பு மீறுவாரோ அவருக்குத் துன்புறுத்தக்கூடிய வேதனை உண்டு.
الترجمة التاميلية - عمر شريف