181. (மரண சாசனமாகிய) அதைக் கேட்டதற்குப் பின்னர், எவரேனும் அதை மாற்றி விட்டால் அதன் பாவமெல்லாம் மாற்றியவரின் மீதே (சாரும்). நிச்சயமாக அல்லாஹ் (மரணிப்பவர் கூறும் சாசனத்தை) நன்கு செவியுறுபவன், (அதை மாற்றும் பாவிகளின் செயலை) நன்கறிந்தவன்.
الترجمة التاميلية
فَمَنۢ بَدَّلَهُۥ بَعۡدَ مَا سَمِعَهُۥ فَإِنَّمَآ إِثۡمُهُۥ عَلَى ٱلَّذِينَ يُبَدِّلُونَهُۥٓۚ إِنَّ ٱللَّهَ سَمِيعٌ عَلِيمٞ
வஸிய்யத்தை (மரண சாஸனத்தை)க் கேட்ட பின்னர், எவரேனும் ஒருவர் அதை மாற்றினால், நிச்சயமாக அதன் பாவமெல்லாம் யார் அதை மாற்றுகிறார்களோ அவர்கள் மீதே சாரும் - நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) கேட்பவனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான்.
Jan Trust Foundation - Tamil translation
எவர் அதைக் கேட்டதற்குப் பின்னர், அதை மாற்றுவாரோ அதன் பாவமெல்லாம் மாற்றுகிறவர்கள் மீதே (சாரும்). நிச்சயமாக அல்லாஹ் நன்கு செவியுறுபவன், மிக அறிந்தவன்.
الترجمة التاميلية - عمر شريف