198. (ஹஜ்ஜூ பயணத்தின்போது) நீங்கள் (தொழில் செய்து) உங்கள் இறைவனுடைய அருளை(க் கொண்டு கிடைக்கும் லாபத்தை)த் தேடிக் கொள்வது உங்கள் மீது குற்றமாகாது. (ஹஜ்ஜூக்குச் சென்ற) நீங்கள் அரஃபாவிலிருந்து திரும்பினால் ‘மஷ்அருல் ஹராம்' என்னும் இடத்தில் அல்லாஹ்வை நினைவு கூருங்கள். நீங்கள் இதற்கு முன் வழி தவறியவர்களாக இருந்தபொழுது உங்களுக்கு அவன் நேரான வழியை அறிவித்ததற்காக மேலும், அவனை ‘திக்ரு' செய்யுங்கள்.
الترجمة التاميلية
لَيۡسَ عَلَيۡكُمۡ جُنَاحٌ أَن تَبۡتَغُواْ فَضۡلٗا مِّن رَّبِّكُمۡۚ فَإِذَآ أَفَضۡتُم مِّنۡ عَرَفَٰتٖ فَٱذۡكُرُواْ ٱللَّهَ عِندَ ٱلۡمَشۡعَرِ ٱلۡحَرَامِۖ وَٱذۡكُرُوهُ كَمَا هَدَىٰكُمۡ وَإِن كُنتُم مِّن قَبۡلِهِۦ لَمِنَ ٱلضَّآلِّينَ
(ஹஜ்ஜின் போது) உங்கள் இறைவனுடைய அருளை நாடுதல்(அதாவது வியாபாரம் போன்றவற்றின் மூலமாக நேர்மையான பலன்களை அடைதல்) உங்கள் மீது குற்றமாகாது. பின்னர் அரஃபாத்திலிருந்து திரும்பும்போது "மஷ்அருள் ஹராம்" என்னும் தலத்தில் அல்லாஹ்வை திக்ரு(தியானம்)செய்யுங்கள்;. உங்களுக்கு அவன் நேர்வழி காட்டியது போல் அவனை நீங்கள் திக்ரு செய்யுங்கள். நிச்சயமாக நீங்கள் இதற்கு முன் வழிதவறியவர்களில் இருந்தீர்கள்.
Jan Trust Foundation - Tamil translation
நீங்கள் (ஹஜ்ஜில் வியாபாரம் செய்து) உங்கள் இறைவனிடமிருந்து அருளைத் தேடிக்கொள்வது உங்கள் மீது குற்றமில்லை. நீங்கள் அரஃபாவிலிருந்து புறப்பட்டால் ‘அல் மஷ்அருல் ஹராம்' அருகில் அல்லாஹ்வை நினைவு கூருங்கள். அவன் உங்களை நேர்வழிப்படுத்தியதற்காக அவனை நினைவு கூருங்கள். நிச்சயமாக இதற்கு முன்னர் நீங்கள் வழி தவறியவர்களில்தான் இருந்தீர்கள்.
الترجمة التاميلية - عمر شريف