206. தவிர, ‘‘நீ அல்லாஹ்வுக்குப் பயந்துகொள். (விஷமம் செய்யாதே)'' என அவனுக்குக் கூறப்பட்டால் (அவனுடைய) பெருமை அவனை (விஷமம் செய்து) பாவத்தைச் செய்யும்படியே (இழுத்துப்) பிடித்துக்கொள்கிறது. ஆகவே, அவனுக்கு நரகமே தகுதியாகும். நிச்சயமாக (அது) தங்குமிடங்களில் மிகக் கெட்டது.
الترجمة التاميلية
وَإِذَا قِيلَ لَهُ ٱتَّقِ ٱللَّهَ أَخَذَتۡهُ ٱلۡعِزَّةُ بِٱلۡإِثۡمِۚ فَحَسۡبُهُۥ جَهَنَّمُۖ وَلَبِئۡسَ ٱلۡمِهَادُ
"அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்" என்று அவனிடம் சொல்லப்பட்டால், ஆணவம் அவனைப் பாவத்தின் பக்கமே இழுத்துச் செல்கிறது. அவனுக்கு நரகமே போதுமானது. நிச்சயமாக அ(ந் நரகமான)து தங்குமிடங்களில் மிக்கக் கேடானதாகும்.
Jan Trust Foundation - Tamil translation
"அல்லாஹ்வை அஞ்சிக் கொள்'' என அவனுக்குக் கூறப்பட்டால், பெருமை அவனைப் பாவத்தைக் கொண்டு பிடித்துக் கொள்கிறது. எனவே, அவனுக்கு நரகமே போதும். (அந்தத்) தங்குமிடம் திட்டமாக கெட்டுவிட்டது.
الترجمة التاميلية - عمر شريف