211. (நபியே!) இஸ்ராயீலின் சந்ததிகளைக் கேட்பீராக: ‘‘எத்தனை தெளிவான அத்தாட்சிகளை நாம் அவர்களுக்குக் கொடுத்திருக்கிறோம்.'' (அவ்வாறிருக்க) எவரேனும் அவை தன்னிடம் வந்ததன் பின் அல்லாஹ்வின் (அத்தாட்சிகளான) அருட்கொடையை மாற்றிவிடுவாரானால் (அவரை) வேதனை செய்வதில் நிச்சயமாக அல்லாஹ் மிகக் கடுமையானவன் ஆவான்.
الترجمة التاميلية
سَلۡ بَنِيٓ إِسۡرَـٰٓءِيلَ كَمۡ ءَاتَيۡنَٰهُم مِّنۡ ءَايَةِۭ بَيِّنَةٖۗ وَمَن يُبَدِّلۡ نِعۡمَةَ ٱللَّهِ مِنۢ بَعۡدِ مَا جَآءَتۡهُ فَإِنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلۡعِقَابِ
(நபியே!) இஸ்ராயீலின் சந்ததிகளிடம் (யஹூதிகளிடம்) நீர் கேளும்; "நாம் எத்தனை தெளிவான அத்தாட்சிகளை அவர்களிடம் அனுப்பினோம்" என்று. அல்லாஹ்வின் அருள் கொடைகள் தம்மிடம் வந்த பின்னர், யார் அதை மாற்றுகிறார்களோ, (அத்தகையோருக்கு) தண்டனை கொடுப்பதில் நிச்சயமாக அல்லாஹ் கடுமையானவன்.
Jan Trust Foundation - Tamil translation
எத்தனை தெளிவான அத்தாட்சியை அவர்களுக்குக் கொடுத்தோம் என இஸ்ராயீலின் சந்ததிகளைக் கேட்பீராக! எவர் அல்லாஹ்வின் அருட்கொடையை அது தம்மிடம் வந்த பின்னர் மாற்றுவாரோ, நிச்சயமாக அல்லாஹ் (அவரைத்) தண்டிப்பதில் மிகக் கடுமையானவன்.
الترجمة التاميلية - عمر شريف