226. தங்கள் மனைவிகளுடன் சேருவதில்லை என்று சத்தியம் செய்து கொண்டவர்களுக்கு நான்கு மாதங்கள் தாமதிக்க அனுமதியுண்டு. ஆகவே, (அதற்குள்) அவர்கள் மீண்டு(ம் சேர்ந்து) கொண்டால் (அல்லாஹ் அவர்களை மன்னித்திடுவான். ஏனெனில்) நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிக்க கருணையுடையவன் ஆவான்.
الترجمة التاميلية
لِّلَّذِينَ يُؤۡلُونَ مِن نِّسَآئِهِمۡ تَرَبُّصُ أَرۡبَعَةِ أَشۡهُرٖۖ فَإِن فَآءُو فَإِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٞ
தங்கள் மனைவியருடன் கூடுவதில்லையென்று சத்தியம் செய்து கொண்டு (விலகி) இருப்பவர்களுக்கு நான்கு மாதத் தவணையுள்ளது. எனவே, (அதற்குள்) அவர்கள் மீண்டு(ம் சேர்ந்துக்) கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனாகவும், மிக்க கருணையுடையோனுமாகவும் இருக்கின்றான்.
Jan Trust Foundation - Tamil translation
தங்கள் மனைவிகளிடம் ஈலா* செய்பவர்களுக்கு நான்கு மாதங்கள் எதிர்பார்ப்பது உண்டு. (அதற்குள்) அவர்கள் மீண்டுவிட்டால் (அது அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டது.) நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன். *(மனைவியுடன் பேசமாட்டேன் என்று சத்தியம் செய்வது)
الترجمة التاميلية - عمر شريف