231. (உங்கள்) மனைவிகளை நீங்கள் (ரஜயியான) தலாக்குக் கூறி, அவர்கள் தங்கள் (இத்தாவின்) தவணையிலிருந்தால் (அத்தவணை முடிவதற்குள்) அவர்களை முறைப்படி (மனைவிகளாகவே) நிறுத்தி வைத்துக் கொள்ளுங்கள். அல்லது (இத்தாவின் தவணையை முடித்துக் கொண்டு) முறைப்படி விட்டுவிடுங்கள். ஆனால், நீங்கள் அநியாயமாகத் துன்புறுத்துவதற்காக அவர்களைத் தடுத்து வைத்துக் கொள்ளாதீர்கள். இவ்விதம் எவரேனும் செய்தால் நிச்சயமாக அவர் தனக்குத்தான்ன தீங்கிழைத்துக் கொண்டவராவார். ஆகவே, அல்லாஹ்வுடைய வசனங்(களில் கூறப்பட்டுள்ள விஷயங்)களைப் பரிகாசமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் மீது அல்லாஹ் புரிந்திருக்கும் அருட்கொடையையும், உங்கள் மீது அவன் இறக்கிய வேதத்தையும், ஞானத்தையும் சிந்தித்து (ஆராய்ந்து) பாருங்கள். அவன் இதைக் கொண்டு உங்களுக்கு உபதேசிக்கிறான். அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் நன்கறிவான் என்பதையும் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்.
الترجمة التاميلية
وَإِذَا طَلَّقۡتُمُ ٱلنِّسَآءَ فَبَلَغۡنَ أَجَلَهُنَّ فَأَمۡسِكُوهُنَّ بِمَعۡرُوفٍ أَوۡ سَرِّحُوهُنَّ بِمَعۡرُوفٖۚ وَلَا تُمۡسِكُوهُنَّ ضِرَارٗا لِّتَعۡتَدُواْۚ وَمَن يَفۡعَلۡ ذَٰلِكَ فَقَدۡ ظَلَمَ نَفۡسَهُۥۚ وَلَا تَتَّخِذُوٓاْ ءَايَٰتِ ٱللَّهِ هُزُوٗاۚ وَٱذۡكُرُواْ نِعۡمَتَ ٱللَّهِ عَلَيۡكُمۡ وَمَآ أَنزَلَ عَلَيۡكُم مِّنَ ٱلۡكِتَٰبِ وَٱلۡحِكۡمَةِ يَعِظُكُم بِهِۦۚ وَٱتَّقُواْ ٱللَّهَ وَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ بِكُلِّ شَيۡءٍ عَلِيمٞ
(மீளக்கூடிய) தலாக் கூறித் தவணை-இத்தத்-முடிவதற்குள் முறைப்படி அவர்களை(உங்களுடன்) நிறுத்திக் கொள்ளுங்கள்; அல்லது (இத்தாவின்) தவணை முடிந்ததும் முறைப்படி அவர்களை விடுவித்து விடுங்கள்;. ஆனால் அவர்களை உங்களுடன் வைத்துக் கொண்டு அவர்களைத் துன்புறுத்தாதீர்கள்;. அவர்களிடம் வரம்பு மீறி நடவாதீர்கள்;. இவ்வாறு ஒருவர் நடந்து கொள்வாரானால், அவர் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொள்கிறார்;. எனவே, அல்லாஹ்வின் வசனங்களைக் கேலிக் கூத்தாக ஆக்கிவிடாதீர்கள்;. அவன் உங்களுக்கு அளித்த அருள் கொடைகளையும், உங்கள் மீது இறக்கிய வேதத்தையும், ஞானத்தையும் சிந்தி; த்துப்பாருங்கள். இவற்றைக்கொண்டு அவன் உங்களுக்கு நற்போதனை செய்கிறான்;. அல்லாஹ்வை அஞ்சுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் நன்கறிபவனாக இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
Jan Trust Foundation - Tamil translation
நீங்கள் பெண்களை விவாகரத்து செய்து, அவர்கள் தங்கள் தவணையை அடைந்தால் நல்ல முறையில் அவர்களைத் தடுத்துக் கொள்ளுங்கள். அல்லது நல்ல முறையில் விட்டுவிடுங்கள். நீங்கள் தீங்கிழைத்து (அவர்கள் மீது) அநியாயம் செய்வதற்காக அவர்களைத் தடுக்காதீர்கள். எவர் அதைச் செய்வாரோ திட்டமாக அவர் தனக்கே தீங்கிழைத்தார். அல்லாஹ்வின் வசனங்களை கேலியாக எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் மீதுள்ள அல்லாஹ்வின் அருளையும் வேதத்திலிருந்தும் ஞானத்திலிருந்தும் உங்கள் மீது அவன் இறக்கியதையும் நினைவுகூருங்கள். அவன் இதன் மூலம் உங்களுக்கு உபதேசிக்கிறான். அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவன் என்பதை அறியுங்கள்.
الترجمة التاميلية - عمر شريف