239. ஆனால், (தொழுகையின் நேரம் வந்து, எதிரி போன்ற ஏதேனும் ஒரு காரணத்தால் ஓரிடத்தில் நின்று தொழ) நீங்கள் பயந்தால், நடந்தவர்களாக அல்லது வாகனத்தின் மீது இருந்தவர்களாக (தொழுங்கள்). தவிர (உங்கள் பயம் நீங்கி) நீங்கள் அச்சமற்று விட்டால் நீங்கள் (தொழுகையை) அறியாமலிருந்த சமயத்தில் அல்லாஹ் உங்களுக்கு(த் தொழுகையை)க் கற்றுக் கொடுத்தபடி (தொழுது) அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள்.
الترجمة التاميلية
فَإِنۡ خِفۡتُمۡ فَرِجَالًا أَوۡ رُكۡبَانٗاۖ فَإِذَآ أَمِنتُمۡ فَٱذۡكُرُواْ ٱللَّهَ كَمَا عَلَّمَكُم مَّا لَمۡ تَكُونُواْ تَعۡلَمُونَ
ஆயினும், (பகைவர்களையோ அல்லது வேறெதையுமோ கொண்டு) நீங்கள் பயப்படும் நிலையில் இருந்தால், நடந்து கொண்டோ அல்லது சவாரி செய்து கொண்டோவாகிலும் தொழுது கொள்ளுங்கள்; பின்னர் நீங்கள் அச்சம் தீர்ந்ததும், நீங்கள் அறியாமல் இருந்ததை அவன் உங்களுக்கு அறிவித்ததைப் போன்று, (நிறைவுடன் தொழுது) அல்லாஹ்வை நினைவு கூறுங்கள்.
Jan Trust Foundation - Tamil translation
நீங்கள் பயந்தால், நடந்தவர்களாக அல்லது வாகனித்தவர்களாக (தொழுங்கள்). நீங்கள் பாதுகாப்புப் பெற்றால் நீங்கள் அறிந்திருக்காதவற்றை அவன் உங்களுக்குக் கற்பித்ததற்காக அல்லாஹ்வை நினைவு கூருங்கள்.
الترجمة التاميلية - عمر شريف