271. (நீங்கள் செய்யும்) தர்மங்களை நீங்கள் வெளிப்படையாக செய்தால் அதுவும் நன்றே. (ஏனெனில், அது பிறரையும் தர்மம் செய்யும்படி தூண்டும்.) ஆயினும், அதை நீங்கள் மறைத்தே கொடுப்பது, அதுவும் அதை ஏழைகளுக்குக் கொடுப்பது உங்களுக்கு மிகவும் நன்மை (பயக்கும்). மேலும், அது (அதாவது இருவகை தர்மமும்) உங்கள் பாவங்களுக்குப் பரிகாரமாகவும் ஆகும். நீங்கள் செய்யும் (வெளிப்படையான மற்றும்) மறைவான அனைத்தையும் அல்லாஹ் நன்கறிவான்.
الترجمة التاميلية
إِن تُبۡدُواْ ٱلصَّدَقَٰتِ فَنِعِمَّا هِيَۖ وَإِن تُخۡفُوهَا وَتُؤۡتُوهَا ٱلۡفُقَرَآءَ فَهُوَ خَيۡرٞ لَّكُمۡۚ وَيُكَفِّرُ عَنكُم مِّن سَيِّـَٔاتِكُمۡۗ وَٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ خَبِيرٞ
தான தர்மங்களை நீங்கள் வெளிப்டையாகச் செய்தால் அதுவும் நல்; லதே (ஏனெனில் அவ்வாறு செய்யப் பிறரையும் அது தூண்டும்;) எனினும் அவற்றை மறைத்து ஏழையெளியோர்க்கு அவை கிடைக்கும்படிச் செய்தால் அது உங்களுக்க இன்னும் நல்லது. அது உங்களுடைய பாவங்களையும் நீக்கும்; நீங்கள் செய்வதை(யெல்லாம்) அல்லாஹ் நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்.
Jan Trust Foundation - Tamil translation
தர்மங்களை நீங்கள் வெளிப்படுத்தினால் அவை நன்றே. அவற்றை நீங்கள் மறைத்து, அவற்றை ஏழைகளுக்குத் தருவது அதுவும் உங்களுக்குச் சிறந்ததுதான். உங்கள் பாவங்களில் சிலவற்றை உங்களை விட்டு அது அகற்றி விடும். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் ஆழ்ந்தறிபவன்.
الترجمة التاميلية - عمر شريف