30. (நபியே!) உமது இறைவன் வானவர்களை நோக்கி “நான் பூமியில் (என்) பிரதிநிதியை (ஆதமை) நிச்சயமாக ஏற்படுத்தப் போகின்றன்'' எனக் கூறிய சமயத்தில் (அதற்கு) அவர்கள் “(பூமியில்) விஷமம் செய்து இரத்தம் சிந்தக்கூடிய (சந்ததிகளைப் பெறும்) அவரை அதில் (உன் பிரதிநிதியாக) ஆக்குகிறாயா? நாங்களோ உன் பரிசுத்தத் தன்மையைக்கூறி உன் புகழைக்கொண்டு உன்னைப் புகழ்ந்து கொண்டிருக்கிறோம்'' என்று கூறினார்கள். அதற்கு அவன் “நீங்கள் அறியாதவற்றை எல்லாம் நிச்சயமாக நான் நன்கறிவேன்'' எனக் கூறிவிட்டான்.
الترجمة التاميلية
وَإِذۡ قَالَ رَبُّكَ لِلۡمَلَـٰٓئِكَةِ إِنِّي جَاعِلٞ فِي ٱلۡأَرۡضِ خَلِيفَةٗۖ قَالُوٓاْ أَتَجۡعَلُ فِيهَا مَن يُفۡسِدُ فِيهَا وَيَسۡفِكُ ٱلدِّمَآءَ وَنَحۡنُ نُسَبِّحُ بِحَمۡدِكَ وَنُقَدِّسُ لَكَۖ قَالَ إِنِّيٓ أَعۡلَمُ مَا لَا تَعۡلَمُونَ
(நபியே) இன்னும், உம் இறைவன் வானவர்களை நோக்கி "நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்" என்று கூறியபோது, அவர்கள் "(இறைவா!) நீ அதில் குழப்பத்தை உண்டாக்கி, இரத்தம் சிந்துவோரையா அமைக்கப்போகிறாய்? இன்னும் நாங்களோ உன் புகழ் ஓதியவர்களாக உன்னைத் துதித்து, உன் பரிசுத்ததைப் போற்றியவர்களாக இருக்கின்றோம்; என்று கூறினார்கள்; அ(தற்கு இறை)வன் "நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்" எனக் கூறினான்.
Jan Trust Foundation - Tamil translation
"நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை படைக்கப்போகிறேன்'' என உம் இறைவன் வானவர்களுக்கு கூறிய சமயத்தை நினைவு கூருங்கள். "அதில் விஷமம் செய்து, இரத்தங்களைச் சிந்தக்கூடியவர்களை அதில் நீ படைக்கிறாயா? நாங்களோ உன் புகழைத் துதிக்கிறோம்; உன்னைப் பரிசுத்தப்படுத்துகிறோம்'' என்று கூறினார்கள். "நீங்கள் அறியாதவற்றை நிச்சயமாக நான் அறிவேன்'' எனக் கூறினான்.
الترجمة التاميلية - عمر شريف