76. மேலும், அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களைச் சந்தித்தால் (“தவ்றாத்தில் உங்கள் நபியைப் பற்றி கூறப்பட்டிருக்கிறது. ஆதலால்,) நாங்களும் (அவரை) நம்பிக்கை கொள்கிறோம்'' எனக் கூறுகிறார்கள். ஆனால், அவர்கள் தனித்தபொழுது ஒருவர் மற்றவரை நோக்கி “(உங்கள் வேதத்தில்) அல்லாஹ் உங்களுக்குத் தெரிவித்திருப்பதை அவர்களுக்கு நீங்கள் அறிவிக்கிறீர்களா? உங்கள் இறைவன் முன்பாக அதைக் கொண்டு அவர்கள் உங்களுடன் தர்க்கிப்பதற்காகவா? (அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்கள்.) இவ்வளவுகூட நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?'' என்று கூறுகின்றனர்.
الترجمة التاميلية
وَإِذَا لَقُواْ ٱلَّذِينَ ءَامَنُواْ قَالُوٓاْ ءَامَنَّا وَإِذَا خَلَا بَعۡضُهُمۡ إِلَىٰ بَعۡضٖ قَالُوٓاْ أَتُحَدِّثُونَهُم بِمَا فَتَحَ ٱللَّهُ عَلَيۡكُمۡ لِيُحَآجُّوكُم بِهِۦ عِندَ رَبِّكُمۡۚ أَفَلَا تَعۡقِلُونَ
மேலும் அவர்கள் ஈமான் கொண்டவர்களை சந்திக்கும்போது, "நாங்களும் ஈமான் கொண்டிருக்கிறோம்" என்று சொல்கிறார்கள்; ஆனால் அவர்களுள் சிலர் (அவர்களுள்) சிலருடன் தனித்திடும்போது, "உங்கள் இறைவன் முன் உங்களுக்கு எதிராக அவர்கள் வாதாடு வதற்காக அல்லாஹ் உங்களுக்கு அறிவித்துத் தந்த (தவ்ராத்)தை அவர்களுக்கு எடுத்துச் சொல்கிறீர்களா, (இதை) நீங்கள் உணரமாட்டீர்களா? என்று(யூதர்கள் சிலர்) கூறுகின்றனர்.
Jan Trust Foundation - Tamil translation
அவர்கள் நம்பிக்கையாளர்களைச் சந்தித்தால் "(நாங்களும்) நம்பிக்கை கொள்கிறோம்'' எனக் கூறுகிறார்கள். அவர்களில் சிலர் சிலருடன் தனித்து விட்டால், "உங்கள் இறைவன் முன் அதைக் கொண்டு அவர்கள் உங்களிடம் தர்க்கிப்பதற்காக அல்லாஹ் உங்களுக்கு தெரிவித்ததை அவர்களுக்கு அறிவிக்கிறீர்களா?'' எனக் கூறுகிறார்கள். நீங்கள் சிந்தித்து புரிய மாட்டீர்களா?
الترجمة التاميلية - عمر شريف