59. நிச்சயமாக நாம் நூஹை அவருடைய மக்களுக்கு (நம்) தூதராக அனுப்பி வைத்தோம். அவர் (அவர்களை நோக்கி) ‘‘என் மக்களே! நீங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனைத் தவிர வேறு இறைவன் உங்களுக்கில்லை. (இதற்கு நீங்கள் மாறு செய்தால்) உங்களுக்கு (வரக்கூடிய) மகத்தானதொரு நாளின் வேதனையை நான் பயப்படுகிறேன்'' என்று கூறினார்.
الترجمة التاميلية
لَقَدۡ أَرۡسَلۡنَا نُوحًا إِلَىٰ قَوۡمِهِۦ فَقَالَ يَٰقَوۡمِ ٱعۡبُدُواْ ٱللَّهَ مَا لَكُم مِّنۡ إِلَٰهٍ غَيۡرُهُۥٓ إِنِّيٓ أَخَافُ عَلَيۡكُمۡ عَذَابَ يَوۡمٍ عَظِيمٖ
நிச்சயமாக நாம் நூஹை அவருடைய கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தோம்; அவர்(தம் கூட்டத்தாரிடம்), "என் கூட்டத்தாரே! அல்லாஹ்வையே வணங்குங்கள், உங்களுக்கு அவனன்றி வேறு நாயனில்லை நிச்சயமாக நான் உங்களுக்கு வர இருக்கும் மகத்தான ஒரு நாளின் வேதனைப்பற்றி அஞ்சுகிறேன் என்று கூறினார்.
Jan Trust Foundation - Tamil translation
திட்டவட்டமாக நூஹை அவருடைய சமுதாயத்திற்கு அனுப்பினோம். (அவர்) “என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள். அவன் அன்றி வணங்கப்படும் எந்த ஒரு கடவுளும் உங்களுக்கில்லை. உங்கள் மீது மகத்தான நாளின் வேதனையை நிச்சயமாக நான் பயப்படுகிறேன்”என்று கூறினார்.
الترجمة التاميلية - عمر شريف