102. மேலும், (அந்த யூதர்கள்) ஸுலைமானுடைய ஆட்சியைப் பற்றி (அவர்களுக்கு) ஷைத்தான் ஓதிக் (கற்றுக்) கொடுத்திருந்த (சூனியம், மாய மந்திரம் ஆகிய)வற்றைப் பின்பற்றினார்கள். ஆனால், ஸுலைமானோ ‘நிராகரிப்பவராக' இருக்கவில்லை; அந்த ஷைத்தான்கள்தான் உண்மையாகவே நிராகரிப்பவர்களாக இருந்தார்கள். ஏனென்றால், அவர்கள் மனிதர்களுக்கு சூனியத்தையும் ‘பாபிலூன்' (என்னும் ஊரில்) ‘ஹாரூத்' ‘மாரூத்' என்னும் இரு வானவர்களுக்கு இறக்கப்பட்டவற்றையும் கற்றுக்கொடுத்து வந்தார்கள். அவ்விரு வானவர்களோ (அவர்களிடம் சூனியத்தைக் கற்கச்சென்ற மனிதர்களை நோக்கி) ‘‘நாங்கள் சோதனையாக இருக்கிறோம். (இதைக் கற்றால் நீங்கள் நிராகரிப்பவர்களாகி விடுவீர்கள். ஆதலால், இதைக் கற்று) நீங்கள் நிராகரிப்பவர்களாகிவிட வேண்டாம் என்று கூறும்வரை அவர்கள் அதை ஒருவருக்கும் கற்றுக் கொடுப்பதேயில்லை, (இவ்விதம் கூறிய பின்னும் இதைக் கற்க விரும்பியவர்கள்) கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் பிரிவினை உண்டு பண்ணக்கூடிய வழியை அவர்களிடமிருந்து கற்றுக் கொள்வார்கள். அல்லாஹ்வின் கட்டளையின்றி அதன் மூலம் அவர்கள் ஒருவருக்குமே தீங்கிழைத்திட முடியாது. அவர்களுக்கு ஒரு பலனுமளிக்காமல் தீங்கிழைக்கக்கூடியது எதுவோ அதைத்தான் அவர்கள் கற்றுக் கொள்கிறார்கள். (இறை நம்பிக்கைக்குப் பதிலாக) அ(ச் சூனியத்)தை எவன் விலைக்கு வாங்கிக் கொண்டானோ அவனுக்கு மறுமையில் ஒரு பாக்கியமும் இல்லை என்பதைத் தெளிவாக சந்தேகமற அவர்களும் அறிந்திருக்கிறார்கள். தங்களையே விற்று அவர்கள் எதை வாங்கிக் கொண்டார்களோ அது நிச்சயமாக (மிகக்) கெட்டது. (இதை) அவர்கள் அறிந்துகொள்ள வேண்டுமே!
الترجمة التاميلية
وَٱتَّبَعُواْ مَا تَتۡلُواْ ٱلشَّيَٰطِينُ عَلَىٰ مُلۡكِ سُلَيۡمَٰنَۖ وَمَا كَفَرَ سُلَيۡمَٰنُ وَلَٰكِنَّ ٱلشَّيَٰطِينَ كَفَرُواْ يُعَلِّمُونَ ٱلنَّاسَ ٱلسِّحۡرَ وَمَآ أُنزِلَ عَلَى ٱلۡمَلَكَيۡنِ بِبَابِلَ هَٰرُوتَ وَمَٰرُوتَۚ وَمَا يُعَلِّمَانِ مِنۡ أَحَدٍ حَتَّىٰ يَقُولَآ إِنَّمَا نَحۡنُ فِتۡنَةٞ فَلَا تَكۡفُرۡۖ فَيَتَعَلَّمُونَ مِنۡهُمَا مَا يُفَرِّقُونَ بِهِۦ بَيۡنَ ٱلۡمَرۡءِ وَزَوۡجِهِۦۚ وَمَا هُم بِضَآرِّينَ بِهِۦ مِنۡ أَحَدٍ إِلَّا بِإِذۡنِ ٱللَّهِۚ وَيَتَعَلَّمُونَ مَا يَضُرُّهُمۡ وَلَا يَنفَعُهُمۡۚ وَلَقَدۡ عَلِمُواْ لَمَنِ ٱشۡتَرَىٰهُ مَا لَهُۥ فِي ٱلۡأٓخِرَةِ مِنۡ خَلَٰقٖۚ وَلَبِئۡسَ مَا شَرَوۡاْ بِهِۦٓ أَنفُسَهُمۡۚ لَوۡ كَانُواْ يَعۡلَمُونَ
அவர்கள் ஸுலைமானின் ஆட்சிக்கு எதிராக ஷைத்தான்கள் ஓதியவற்றையே பின்பற்றினார்கள்;. ஆனால் ஸுலைமான் ஒருபோதும் நிராகரித்தவர் அல்லர். ஷைத்தான்கள் தாம் நிராகரிப்பவர்கள். அவர்கள்தாம் மனிதர்களுக்குச் சூனியத்தைக் கற்றுக்கொடுத்தார்கள்; இன்னும், பாபில் (பாபிலோன் என்னும் ஊரில்) ஹாருத், மாருத் என்ற இரண்டு மலக்குகளுக்கு இறக்கப்பட்டதையும் (தவறான வழியில் பிரயோகிக்கக் கற்றுக்கொடுத்தார்கள்). ஆனால் அவர்கள் (மலக்குகள்) இருவரும்; "நிச்சயமாக நாங்கள் சோதனையாக இருக்கிறோம்; (இதைக் கற்று) நீங்கள் நிராகரிக்கும் காஃபிர்கள் ஆகிவிடாதீர்கள்" என்று சொல்லி எச்சரிக்காத வரையில், எவருக்கும் இ(ந்த சூனியத்)தைக் கற்றுக் கொடுக்கவில்லை, அப்படியிருந்தும் கணவன் - மனைவியிடையே பிரிவை உண்டாக்கும் செயலை அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டார்கள். எனினும் அல்லாஹ்வின் கட்டளையின்றி அவர்கள் எவருக்கும் எத்தகைய தீங்கும் இதன் மூலம் இழைக்க முடியாது. தங்களுக்குத் தீங்கிழைப்பதையும், எந்த வித நன்மையும் தராததையுமே - கற்றுக் கொண்டார்கள். (சூனியத்தை) விலை கொடுத்து வாங்கிக் கொண்டவர்களுக்கு, மறுமையில் யாதொரு பாக்கியமும் இல்லை என்பதை அவர்கள் நன்கறிந்துள்ளார்கள். அவர்கள் தங்கள் ஆத்மாக்களை விற்றுப்பெற்றுக்கொண்டது கெட்டதாகும். இதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?
Jan Trust Foundation - Tamil translation
(யூதர்கள்) சுலைமானுடைய ஆட்சியில் ஷைத்தான்கள் ஓதியவற்றைப் பின்பற்றினார்கள். சுலைமான் நிராகரிக்கவில்லை. எனினும் ஷைத்தான்கள் தான் நிராகரித்தார்கள். (அவர்கள்) மனிதர்களுக்கு சூனியத்தையும் பாபிலோனில் ஹாரூத், மாரூத் (என்ற இரு) வானவர்களுக்கு இறக்கப்பட்டவற்றையும் கற்பித்தார்கள். அவ்விரு(வான)வர்கள், "நாங்களெல்லாம் ஒரு சோதனையாவோம். ஆகவே. (இதைக் கற்று) நிராகரிக்காதே!'' என்று கூறும் வரை (அதை) ஒருவருக்கும் கற்றுக் கொடுக்கவில்லை. எனவே, ஆணுக்கும் அவன் மனைவிக்கும் இடையில் எதன் மூலம் பிரிப்பார்களோ அதை அவ்விருவரிடமிருந்து கற்றார்கள். அல்லாஹ்வின் அனுமதி கொண்டே தவிர அதன் மூலம் அவர்கள் ஒருவருக்குமே தீங்கிழைப்பவர்களாக இல்லை. அவர்களுக்குப் பலனளிக்காத, அவர்களுக்குத் தீங்கிழைக்கக்கூடியவற்றைத்தான் (அவர்கள்) கற்றார்கள். அதை எவர் விலைக்கு வாங்கினாரோ அவருக்கு மறுமையில் எந்த பாக்கியமும் இல்லை என்பதை திட்டவட்டமாக (அவர்கள்) அறிந்தார்கள். தங்களையே எதற்கு பகரமாக விற்றார்களோ அது திட்டமாக கெட்டது. (இதை) அவர்கள் அறிந்திருக்க வேண்டுமே!
الترجمة التاميلية - عمر شريف