135. (நம்பிக்கையாளர்களை நோக்கி) ‘‘நீங்கள் யூதர்களாக அல்லது கிறிஸ்தவர்களாக ஆகிவிடுங்கள். நேரானவழியை அடைந்து விடுவீர்கள்'' என அவர்கள் கூறுகிறார்கள். அதற்கு, ‘‘இல்லை! நேரான வழியைச் சார்ந்த இப்றாஹீமின் மார்க்கத்தையே (பின்பற்றுவோம்). அவர் (உங்களைப்போல்) இணைவைத்து வணங்கியவர்களில்'' இல்லை என்று (நபியே!) கூறுவீராக.
الترجمة التاميلية
وَقَالُواْ كُونُواْ هُودًا أَوۡ نَصَٰرَىٰ تَهۡتَدُواْۗ قُلۡ بَلۡ مِلَّةَ إِبۡرَٰهِـۧمَ حَنِيفٗاۖ وَمَا كَانَ مِنَ ٱلۡمُشۡرِكِينَ
"நீங்கள் யூதர்களாக அல்லது கிறிஸ்தவர்களாக மாறிவிடுங்கள் - நீங்கள் நேர்வழியை அடைவீர்கள்" என்று அவர்கள் கூறுகிறார்கள். "அப்படியல்ல! (நேரான வழியைச் சார்ந்த) இப்ராஹீமின் மார்க்கத்தையே பின்பற்றுவோம், (இணை வைக்கும்) முஷ்ரிக்குகளில் நின்றும் அவரில்லை" என்று (நபியே!) நீர் கூறுவீராக!
Jan Trust Foundation - Tamil translation
(முஸ்லிம்களை நோக்கி), "நீங்கள் யூதர்களாக அல்லது கிறித்துவர்களாக ஆகிவிடுங்கள், நேர்வழி பெறுவீர்கள்'' எனக் கூறினார்கள். (நபியே) கூறுவீராக! "மாறாக, இஸ்லாமிய மார்க்கத்தில் உறுதியுடையவரான இப்ராஹீமின் மார்க்கத்தையே (பின்பற்றுவோம்). அவர் இணைவைப்பவர்களில் இருக்கவில்லை.''
الترجمة التاميلية - عمر شريف