204. (நபியே! உம்மிடம்) இவ்வுலக வாழ்க்கையைப் பற்றி(ப் பேசும் பொழுது) தன் (சாதுரியமான) வார்த்தையைக் கொண்டு உம்மை ஆச்சரியத்திற்குள்ளாக்கக்கூடிய ஒருவன் அம்மனிதர்களில் உண்டு. அவன் (உம் மீது அன்பு கொண்டிருப்பதாகக் கூறி) தன் மனதில் உள்ளவற்றிற்கு (சத்தியம் செய்து) அல்லாஹ்வை சாட்சி ஆக்குவான். (உண்மையில்) அவன்தான் (உமக்குக்) கொடிய எதிரியாவான்.
الترجمة التاميلية
وَمِنَ ٱلنَّاسِ مَن يُعۡجِبُكَ قَوۡلُهُۥ فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا وَيُشۡهِدُ ٱللَّهَ عَلَىٰ مَا فِي قَلۡبِهِۦ وَهُوَ أَلَدُّ ٱلۡخِصَامِ
(நபியே!) மனிதர்களில் ஒருவ(கையின)ன் இருக்கிறான்; உலக வாழ்க்கை பற்றிய அவன் பேச்சு உம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்; தன் இருதயத்தில் உள்ளது பற்றி(சத்தியஞ் செய்து) அல்லாஹ்வையே சாட்சியாகக் கூறுவான். (உண்மையில்) அ(த்தகைய)வன் தான் (உம்முடைய) கொடிய பகைவனாவான்.
Jan Trust Foundation - Tamil translation
(நபியே!) இவ்வுலக வாழ்க்கையைப் பற்றி எவனுடைய பேச்சு உம்மை வியக்க வைக்குமோ அ(த்தகைய)வனும் மக்களில் இருக்கிறான். அவன் தன் உள்ளத்தில் உள்ளவற்றிற்கு அல்லாஹ்வைச் சாட்சியாக்குவான். அவன் வாதிகளில் கடுமையான வாதியாவான்.
الترجمة التاميلية - عمر شريف