258. (நபியே!) நீர் ஒருவனை கவனித்தீரா? அவனுக்கு அல்லாஹ் அரசாட்சி கொடுத்ததற்காக அவன் (கர்வம் கொண்டு) இப்ராஹீமிடம் அவருடைய இறைவனைப் பற்றித் தர்க்கம் செய்தான். இப்றாஹீம் ‘‘எவன் உயிர்ப்பிக்கவும் மரணிக்கவும் செய்கிறானோ அவன்தான் என் இறைவன்'' என்று கூறியதற்கு, அவன் ‘‘நானும் உயிர்ப்பிப்பேன், மரணிக்கவும் செய்வேன்'' என்று கூறினான். (அதற்கு) இப்றாஹீம் ‘‘(அவ்வாறாயின்) நிச்சயமாக அல்லாஹ் சூரியனை கிழக்குத்திசையில் உதயமாக்குகிறான். நீ அதை மேற்குத்திசையில் உதயமாக்கு'' எனக் கூறினார். ஆகவே, (அல்லாஹ்வை) நிராகரித்த அவன் (எவ்வித விடையுமளிக்க முடியாமல் திகைத்து) வாயடைப்பட்டான். அல்லாஹ் அநியாயக்கார கூட்டத்திற்கு நேர்வழி காட்டுவதில்லை.
الترجمة التاميلية
أَلَمۡ تَرَ إِلَى ٱلَّذِي حَآجَّ إِبۡرَٰهِـۧمَ فِي رَبِّهِۦٓ أَنۡ ءَاتَىٰهُ ٱللَّهُ ٱلۡمُلۡكَ إِذۡ قَالَ إِبۡرَٰهِـۧمُ رَبِّيَ ٱلَّذِي يُحۡيِۦ وَيُمِيتُ قَالَ أَنَا۠ أُحۡيِۦ وَأُمِيتُۖ قَالَ إِبۡرَٰهِـۧمُ فَإِنَّ ٱللَّهَ يَأۡتِي بِٱلشَّمۡسِ مِنَ ٱلۡمَشۡرِقِ فَأۡتِ بِهَا مِنَ ٱلۡمَغۡرِبِ فَبُهِتَ ٱلَّذِي كَفَرَۗ وَٱللَّهُ لَا يَهۡدِي ٱلۡقَوۡمَ ٱلظَّـٰلِمِينَ
அல்லாஹ் தனக்கு அரசாட்சி கொடுத்ததின் காரணமாக (ஆணவங்கொண்டு), இப்ராஹீமிடத்தில் அவருடைய இறைவனைப் பற்றித் தர்க்கம் செய்தவனை (நபியே!) நீர் கவனித்தீரா? இப்ராஹீம் கூறினார்; "எவன் உயிர் கொடுக்கவும், மரணம் அடையும்படியும் செய்கிறானோ, அவனே என்னுடைய ரப்பு(இறைவன்)" என்று. அதற்கவன், "நானும் உயிர் கொடுக்கிறேன்;, மரணம் அடையும் படியும் செய்கிறேன்" என்று கூறினான்; (அப்பொழுது) இப்ராஹீம் கூறினார்; "திட்டமாக அல்லாஹ் சூரியனைக் கிழக்கில் உதிக்கச் செய்கிறான்;, நீ அதை மேற்குத் திசையில் உதிக்கும்படிச் செய்!" என்று. (அல்லாஹ்வை) நிராகரித்த அவன், திகைத்து வாயடைப்பட்டுப் போனான்;. தவிர, அல்லாஹ் அநியாயம் செய்யும்கூட்டத்தாருக்கு நேர் வழி காண்பிப்பதில்லை.
Jan Trust Foundation - Tamil translation
(நபியே!) அல்லாஹ், அவனுக்கு ஆட்சியைக் கொடுத்தால் இப்றாஹீமிடம் அவருடைய இறைவன் விசயத்தில் தர்க்கித்தவனை நீர் கவனிக்கவில்லையா? "என் இறைவன் உயிர்ப்பிக்கிறான். மரணிக்கச் செய்கிறான்'' என்று இப்றாஹீம் கூறியபோது, அவன் "நான் உயிர்ப்பிப்பேன், மரணிக்கச் செய்வேன்'' என்று கூறினான். இப்றாஹீம் கூறினார்: "நிச்சயமாக அல்லாஹ் சூரியனைக் கிழக்கிலிருந்து கொண்டு வருகிறான். எனவே அதை மேற்கிலிருந்து நீ கொண்டு வா.'' ஆகவே நிராகரித்தவன் வாயடைக்கப்பட்டான். அல்லாஹ் அநியாயக்கார மக்களை நேர்வழி செலுத்தமாட்டான்.
الترجمة التاميلية - عمر شريف