97. அதற்கு மூஸா (அவனை நோக்கி ‘‘இங்கிருந்து) அப்புறப்பட்டுவிடு. நிச்சயமாக நீ (எவரைக் கண்டபோதிலும்) ‘‘என்னைத் தீண்டாதீர்கள்'' என்று கூறித்திரிவதுதான் இவ்வுலகத்தில் உனக்குரிய தண்டனை. (மறுமையிலோ) நிச்சயமாக உனக்கு வாக்களிக்கப்பட்ட கொடிய வேதனையுண்டு. நீ அதிலிருந்து தப்பவே மாட்டாய். இதோ! நீ ஆராதனை செய்து கொண்டிருந்த தெய்வத்தைப் பார். நிச்சயமாக நான் அதை உருக்கி(ப் பஸ்பமாக்கி) கடலில் தூற்றி விடுவேன்'' என்றும் கூறினார்.
الترجمة التاميلية
قَالَ فَٱذۡهَبۡ فَإِنَّ لَكَ فِي ٱلۡحَيَوٰةِ أَن تَقُولَ لَا مِسَاسَۖ وَإِنَّ لَكَ مَوۡعِدٗا لَّن تُخۡلَفَهُۥۖ وَٱنظُرۡ إِلَىٰٓ إِلَٰهِكَ ٱلَّذِي ظَلۡتَ عَلَيۡهِ عَاكِفٗاۖ لَّنُحَرِّقَنَّهُۥ ثُمَّ لَنَنسِفَنَّهُۥ فِي ٱلۡيَمِّ نَسۡفًا
"நீ இங்கிருந்து போய் விடு நிச்சயமாக இந்த வாழ்க்கையில் (எவரைக் கண்டாலும், என்னைத்) "தீண்டாதீர்கள்" என்று சொல்(லித் திரி)வது தான் உனக்குள்ளது, (மறுமையில்) நிச்சயமாக உனக்கு வாக்களிக்கப்பட்ட வேதனையும் உண்டு அதை விட்டும் நீ தப்பமாட்டாய்; மேலும்; நீ தரிபட்டு ஆராதனை செய்து கொண்டிருந்தாயே அந்த "நாயனைப்" பார்; நிச்சயமாக அதனைச் சுட்டெரித்துப் பின்னர் (சாம்பலாக்கி) அதைக் கடலில் பரத்திவிடுவோம்" என்றார்.
Jan Trust Foundation - Tamil translation
அவர் (மூஸா) கூறினார்: நீ சென்று விடு. இவ்வாழ்க்கையில் “லாமிஸாஸ்” (என்னைத்) தொடாதீர் என்று சொல்வதுதான் நிச்சயமாக உனக்கு நிகழும். இன்னும் உமக்கு ஒரு குறிப்பிட்ட நேரம் உண்டு. அதை நீ தவறவிடமாட்டாய். நீ வணங்கியவனாக இருந்த உனது தெய்வத்தைப் பார். நிச்சயமாக நாம் அதை எரித்து விடுவோம். பிறகு அதை கடலில் பரப்பிவிடுவோம்.
الترجمة التاميلية - عمر شريف