8. உணவே உட்கொள்ளாத உடலை அவர்களுக்கு (தூதர்களுக்கு) நாம் கொடுக்க வில்லை. தவிர, அவர்கள் (பூமியில் என்றுமே மரணிக்காத) நிரந்தரம் பெற்றவர்களாகவும் இருக்கவில்லை.
الترجمة التاميلية
وَمَا جَعَلۡنَٰهُمۡ جَسَدٗا لَّا يَأۡكُلُونَ ٱلطَّعَامَ وَمَا كَانُواْ خَٰلِدِينَ
அன்றியும் நாம் அவர்களுக்கு உணவு அருந்தாத உடலை அமைக்கவில்லை மேலும், (பூமியில்) நிரந்தரமானவர்களாகவும் அவர்களிருக்கவில்லை.
Jan Trust Foundation - Tamil translation
நாம் அவர்களை (அந்த தூதர்களை) உணவு சாப்பிடாத உடல்களாக (வானவர்களாக) ஆக்கவில்லை. இன்னும் அவர்கள் (மரணமில்லாத) நிரந்தர தன்மை உள்ளவர்களாகவும் இருக்கவில்லை.
الترجمة التاميلية - عمر شريف