33. (ஹூது நபியுடைய) மக்களுக்கு இவ்வுலக வாழ்க்கையின் சுகபோகங்களை நாம் கொடுத்திருந்தும் அவர்களுடைய தலைவர்கள் (அவற்றையும்) அவரையும் நிராகரித்துவிட்டு மறுமையைச் சந்திப்பதையும் பொய்யாக்கி (‘ஹூது' நபியை சுட்டிக் காண்பித்து) ‘‘ இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதனே தவிர வேறில்லை. நீங்கள் புசிப்பதையே அவரும் புசிக்கிறார்; நீங்கள் குடிப்பதையே அவரும் குடிக்கிறார்.
الترجمة التاميلية
وَقَالَ ٱلۡمَلَأُ مِن قَوۡمِهِ ٱلَّذِينَ كَفَرُواْ وَكَذَّبُواْ بِلِقَآءِ ٱلۡأٓخِرَةِ وَأَتۡرَفۡنَٰهُمۡ فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا مَا هَٰذَآ إِلَّا بَشَرٞ مِّثۡلُكُمۡ يَأۡكُلُ مِمَّا تَأۡكُلُونَ مِنۡهُ وَيَشۡرَبُ مِمَّا تَشۡرَبُونَ
ஆனால், அவருடைய சமூகத்தாரில் காஃபிர்களாய் இருந்த தலைவர்களும் இன்னும் இறுதி தீர்ப்பு நாளை சந்திப்பதைப் பொய்ப்படுத்த முற்பட்டார்களே அவர்களும், நாம் அவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையில் விசாலமான (சகானுபவங்களைக்) கொடுத்திருந்தோமே அவர்களும், (தம் சமூகத்தாரிடம்) "இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதரேயன்றி வேறில்லை நீங்கள் உண்பதையே அவரும் உண்கிறார்; நீங்கள் குடிப்பதையே அவரும் குடிக்கிறார்.
Jan Trust Foundation - Tamil translation
அவருடைய மக்களில் நிராகரித்து மறுமையின் சந்திப்பை பொய்யாக்கிய தலைவர்கள் கூறினர். - அவர்களுக்கு நாம் உலக வாழ்வில் செல்வத்தை வழங்கியிருந்தோம். - இவர் உங்களைப் போன்ற மனிதரே தவிர வேறு இல்லை. நீங்கள் சாப்பிடுவதிலிருந்து அவர் சாப்பிடுகிறார் இன்னும் நீங்கள் குடிப்பதிலிருந்து அவர் குடிக்கிறார்.
الترجمة التاميلية - عمر شريف