63. எனினும், (நிராகரிக்கும்) அவர்களுடைய உள்ளங்கள் இ(வ்வேதத்)தைப் பற்றி (சந்தேகித்து) மடமையில் ஆழ்ந்து கிடக்கின்றன. இதையன்றி அவர்கள் செய்து கொண்டிருக்கும் வேறு பல (தீய)காரியங்களும் இருக்கின்றன.
الترجمة التاميلية
بَلۡ قُلُوبُهُمۡ فِي غَمۡرَةٖ مِّنۡ هَٰذَا وَلَهُمۡ أَعۡمَٰلٞ مِّن دُونِ ذَٰلِكَ هُمۡ لَهَا عَٰمِلُونَ
ஆனால் அவர்களுடைய இதயங்கள் இதைக் குறித்து அறியாமையிலேயே (ஆழ்ந்து) கிடக்கின்றன இன்னும், அவர்களுக்கு இதுவன்றி (வேறு தீய) காரியங்களும் உண்டு. அதனை அவர்கள் செய்து வருகிறார்கள்.
Jan Trust Foundation - Tamil translation
மாறாக அவர்களது உள்ளங்கள் இதை (இந்த குர்ஆனை) விட்டு அறியாமையில் இருக்கின்றனர். அவர்களுக்கு (லிருந்து வரை வர்ணிக்கப்பட்ட நல்லவர்களின் நல்ல அமல்கள் அன்றி) வேறு செயல்களும் உள்ளன. (பாவங்கள் உள்ளன) அவர்கள் அதைத்தான் செய்பவர்கள்.
الترجمة التاميلية - عمر شريف