71. சத்தியம் அவர்களுடைய (தப்பான) விருப்பத்தைப் பின்பற்றுவதென்றால் நிச்சயமாக வானங்களும் பூமியும் அவற்றில் உள்ளவையும் அழிந்துவிடும். எனினும், அவர்களுக்கு நல்ல உபதேசத்தையே அனுப்பினோம். அவர்களோ தங்களிடம் வந்த நல்லுபதேசத்தை புறக்கணித்து விட்டனர்.
الترجمة التاميلية
وَلَوِ ٱتَّبَعَ ٱلۡحَقُّ أَهۡوَآءَهُمۡ لَفَسَدَتِ ٱلسَّمَٰوَٰتُ وَٱلۡأَرۡضُ وَمَن فِيهِنَّۚ بَلۡ أَتَيۡنَٰهُم بِذِكۡرِهِمۡ فَهُمۡ عَن ذِكۡرِهِم مُّعۡرِضُونَ
இன்னும் அந்த உண்மை அவர்களுடைய இச்சைகளைப் பின்பற்றி இருக்குமாயின் நிச்சயமாக வானங்களும், பூமியும் அவற்றிலுள்ளவைகளும் சீர்கெட்டுப் போயிருக்கும்; அதனால், அவர்களுக்கு நாம் நினைவூட்டும் நல்லுபதேசமான திக்ரை குர்ஆனை அளித்தோம். எனினும் அவர்கள் தங்களிடம் வந்த திக்ரை குர்ஆனை புறக்கணிக்கின்றனர்.
Jan Trust Foundation - Tamil translation
உண்மையாளன் (-அல்லாஹ்) அவர்களது விருப்பங்களை பின்பற்றினால் (-அதற்கு ஏற்ப அவன் நடந்து கொண்டால்) வானங்களும், பூமியும் அவற்றில் உள்ளவர்களும் நாசமடைந்து இருப்பார்கள். மாறாக, அவர்களுக்கு உரிய விளக்கத்தை நாம் அவர்களுக்குக் கொடுத்தோம். ஆனால் அவர்கள் தங்களுக்கு கூறப்பட்ட விளக்கத்தை புறக்கணிக்கக்கூடியவர்கள் ஆவர்.
الترجمة التاميلية - عمر شريف