16. பின்னர் தாவூதுக்கு ஸுலைமான் வாரிசானார். (ஸுலைமான் மனிதர்களை நோக்கி) ‘‘ மனிதர்களே! எங்களுக்குப் பறவைகளின் மொழி கற்பிக்கப்பட்டிருக்கிறது. எங்களுக்கு (வேண்டிய) எல்லாப் பொருள்களும் (ஏராளமாகவே) கொடுக்கப்பட்டிருக்கின்றன. நிச்சயமாக இது (இறைவனின்) மிக்க தெளிவானதொரு அருளாகும்'' என்று கூறி(யும் நன்றி செலுத்தி)னார்.
الترجمة التاميلية
وَوَرِثَ سُلَيۡمَٰنُ دَاوُۥدَۖ وَقَالَ يَـٰٓأَيُّهَا ٱلنَّاسُ عُلِّمۡنَا مَنطِقَ ٱلطَّيۡرِ وَأُوتِينَا مِن كُلِّ شَيۡءٍۖ إِنَّ هَٰذَا لَهُوَ ٱلۡفَضۡلُ ٱلۡمُبِينُ
பின்னர், ஸுலைமான் தாவூதின் வாரிசானார் அவர் கூறினார்; "மனிதர்களே! பறவைகளின் மொழி எங்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது மேலும், நாங்கள் எல்லா விதப் பொருள்களிலிருந்தும் (ஏராளமாக) அளிக்கப்பட்டுள்ளோம்; நிச்சயமாக இது தெளிவான அருள் கொடையாகும்.
Jan Trust Foundation - Tamil translation
தாவூதுக்கு (அவரின் கல்விக்கும் ஆட்சிக்கும் மற்ற பிள்ளைகளைப் பார்க்கிலும்) சுலைமான் வாரிசாக ஆனார். இன்னும், அவர் கூறினார்: “மக்களே! நாங்கள் பறவைகளின் பேச்சை (-மொழிகளை புரியும் கல்வியை) கற்பிக்கப்பட்டோம். (பல செல்வங்களிலிருந்து எங்களுக்கு தேவையான) எல்லாம் வழங்கப்பட்டோம். நிச்சயமாக இதுதான் தெளிவான மேன்மையாகும்.
الترجمة التاميلية - عمر شريف