37. (வந்தவர்களின் தலைவனை நோக்கி) நீ அவர்களிடம் திரும்பச் செல். அவர்களால் எதிர்க்க முடியாததொரு ராணுவத்துடன் நிச்சயமாக நாங்கள் அவர்களிடம் வருவோம். அவர்களை சிறுமைப்பட்டவர்களாக அவ்வூரிலிருந்து துரத்தி விடுவோம்'' என்று (கூறி அனுப்பிவிட்டு,)
الترجمة التاميلية
ٱرۡجِعۡ إِلَيۡهِمۡ فَلَنَأۡتِيَنَّهُم بِجُنُودٖ لَّا قِبَلَ لَهُم بِهَا وَلَنُخۡرِجَنَّهُم مِّنۡهَآ أَذِلَّةٗ وَهُمۡ صَٰغِرُونَ
"அவர்களிடமே திரும்பிச் செல்க நிச்சமயாக நாம் அவர்களால் எதிர்க்க முடியாத (பலமுள்ள) ஒரு பெரும் படையைக் கொண்டு அவர்களிடம் வருவோம்; நாம் அவர்களைச் சிறுமைப் படுத்தி, அவ்வூரிலிருந்து வெளியேற்றிவிடுவோம், மேலும் அவர்கள் இழிந்தவர்களாவார்கள்" (என்று ஸுலைமான் கூறினார்).
Jan Trust Foundation - Tamil translation
நீ அவர்களிடம் திரும்பிப் போ! நாம் அவர்களிடம் (பல) இராணுவங்களைக் கொண்டு வருவோம். அவர்களை (-இராணுவங்களை எதிர்ப்பதற்கு) அவர்களுக்கு அறவே வலிமை இருக்காது. இன்னும் நிச்சயமாக அவர்களை அதிலிருந்து (அவர்களின் ஊரிலிருந்து) இழிவானவர்களாக நாம் வெளியேற்றுவோம். அவர்கள் (இஸ்லாமை ஏற்கவில்லை என்றால்) சிறுமைப்படுவார்கள்.
الترجمة التاميلية - عمر شريف