124. இப்றாஹீமை அவருடைய இறைவன் (பெரும் சோதனையான) பல கட்டளைகளையிட்டு சோதித்த சமயத்தில் அவர் அவற்றை நிறைவு செய்தார். (ஆதலால், இறைவன்) ‘‘நிச்சயமாக நான் உம்மை மனிதர்களுக்கு (நேர்வழி காட்டக்கூடிய) தலைவராக ஆக்கினான்'' எனக் கூறினான். அதற்கு (இப்றாஹீம்) ‘‘என் சந்ததிகளையுமா (தலைவர்களாக ஆக்குவாய்?)'' எனக் கேட்டார். (அதற்கு ‘‘உமது சந்ததியிலுள்ள) அநியாயக்காரர்களை என் (இந்த) உறுதிமொழி சாராது'' எனக் கூறினான்.
الترجمة التاميلية
۞وَإِذِ ٱبۡتَلَىٰٓ إِبۡرَٰهِـۧمَ رَبُّهُۥ بِكَلِمَٰتٖ فَأَتَمَّهُنَّۖ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامٗاۖ قَالَ وَمِن ذُرِّيَّتِيۖ قَالَ لَا يَنَالُ عَهۡدِي ٱلظَّـٰلِمِينَ
(இன்னும் இதையும் எண்ணிப்பாருங்கள்;) இப்ராஹீமை அவருடைய இறைவன் சில கட்டளைகளையிட்டுச் சோதித்தான்;. அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார்;. நிச்சயமாக நான் உம்மை மக்களுக்கு இமாமாக(த் தலைவராக) ஆக்குகிறேன்" என்று அவன் கூறினான்;. அதற்கு இப்ராஹீம்; "என் சந்ததியினரிலும்(இமாம்களை ஆக்குவாயா?)" எனக் கேட்டார்;. என் வாக்குறுதி(உம் சந்ததியிலுள்ள) அநியாயக்காரர்களுக்குச் சேராது என்று கூறினான்.
Jan Trust Foundation - Tamil translation
இப்ராஹீமை அவருடைய இறைவன் (பல) கட்டளைகளைக் கொண்டு சோதித்த சமயத்தை நினைவு கூருங்கள். ஆகவே அவற்றை (அவர்) நிறைவு செய்தார். "நிச்சயமாக நான் உம்மை மனிதர்களுக்கு (நேர்வழி காட்டுகிற) தலைவராக ஆக்குகிறேன்'' எனக் கூறினான். என் சந்ததிகளிலிருந்தும் (ஆக்கு) என (இப்ராஹீம்) கூறினார். "அநியாயக்காரர்களை என் (இந்த) வாக்குறுதி அடையாது'' என (அல்லாஹ்) கூறினான்.
الترجمة التاميلية - عمر شريف