195. நீங்கள் அல்லாஹ்வுடைய பாதையில் (தாராளமாகச்) செலவு செய்யுங்கள்; அல்லாஹ்வுடைய பாதையில் செலவு செய்யாது) உங்களை நீங்களே ஆபத்திற்குள்ளாக்கிக் கொள்ளாதீர்கள்; (பிறருக்கு உதவியும்) நன்மையும் செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (பிறருக்கு) நன்மை செய்பவர்களை நேசிக்கிறான்.
الترجمة التاميلية
وَأَنفِقُواْ فِي سَبِيلِ ٱللَّهِ وَلَا تُلۡقُواْ بِأَيۡدِيكُمۡ إِلَى ٱلتَّهۡلُكَةِ وَأَحۡسِنُوٓاْۚ إِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلۡمُحۡسِنِينَ
அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள்;. இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்;. இன்னும், நன்மை செய்யுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை -நன்மை செய்வோரை- நேசிக்கின்றான்.
Jan Trust Foundation - Tamil translation
அல்லாஹ்வுடைய பாதையில் தர்மம் புரியுங்கள்; உங்கள் கரங்களை அழிவில் போடாதீர்கள்; நல்லறம் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நல்லறம் புரிவோரை நேசிக்கிறான்.
الترجمة التاميلية - عمر شريف