240. உங்களில் மனைவிகளை விட்டுவிட்டு இறப்பவர்கள் ‘தங்கள் மனைவிகளை (வீட்டைவிட்டு) அப்புறப்படுத்தி விடாது, ஓர் ஆண்டுவரை உணவு உடை போன்ற செலவுகளை வழங்குமாறு' (வாரிசுகளுக்கு) மரண சாசனம் கூறவும். ஆனால், அவர்கள் (தாமாகவே) வெளியில் சென்று தங்களுக்கு முறைப்படி (திருமணம்) ஏதும் செய்து கொண்டா(ல், அ)தனால் உங்கள் மீது குற்றமில்லை. அல்லாஹ் மிகைத்தவன், நுண்ணறிவுடையவன் ஆவான்.
الترجمة التاميلية
وَٱلَّذِينَ يُتَوَفَّوۡنَ مِنكُمۡ وَيَذَرُونَ أَزۡوَٰجٗا وَصِيَّةٗ لِّأَزۡوَٰجِهِم مَّتَٰعًا إِلَى ٱلۡحَوۡلِ غَيۡرَ إِخۡرَاجٖۚ فَإِنۡ خَرَجۡنَ فَلَا جُنَاحَ عَلَيۡكُمۡ فِي مَا فَعَلۡنَ فِيٓ أَنفُسِهِنَّ مِن مَّعۡرُوفٖۗ وَٱللَّهُ عَزِيزٌ حَكِيمٞ
உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு இறக்கும் நிலையில் இருப்பார்களானால், தங்கள் மனைவியருக்கு ஓராண்டு வரை (உணவு, உடை போன்ற தேவைகளைக் கொடுத்து) ஆதரித்து, (வீட்டை விட்டு அவர்கள்) வெளியேற்றப்படாதபடி (வாரிசகளுக்கு) அவர்கள் மரண சாசனம் கூறுதல் வேண்டும்; ஆனால், அப்பெண்கள் தாங்களே வெளியே சென்று முறைப்படி தங்கள் காரியங்களைச் செய்து கொண்டார்களானால், (அதில்) உங்கள் மீது குற்றமில்லை - மேலும் அல்லாஹ் வல்லமையுடையவனும், அறிவாற்றல் உடையோனும் ஆவான்.
Jan Trust Foundation - Tamil translation
உங்களில் எவர்கள் மனைவிகளை விட்டுவிட்டு மரணிக்கிறார்களோ அவர்கள் தங்கள் மனைவிகளுக்கு ஓராண்டு வரை (அவர்களை) வெளியேற்றாமல் பொருள் வழங்குமாறு (வாரிசுகளுக்கு) மரணசாசனம் கூறவும். அவர்கள் (தாமாகவே) வெளியேறினால், (பிறகு) ஏதேனும் நல்லதைத் தங்களுக்குச் செய்வதில் உங்கள் மீது குற்றமே இல்லை. அல்லாஹ் மிகைத்தவன், ஞானவான் ஆவான்.
الترجمة التاميلية - عمر شريف