63. 'தூர்' என்னும் மலையை நாம் உங்களுக்கு மேல் உயர்த்தி உங்களிடம் வாக்குறுதி வாங்கிய சமயத்தில் “நாம் உங்களுக்குக் கொடுத்த (தவ்றாத் என்னும் வேதத்)தை உறுதியாகக் கடைப்பிடியுங்கள், அதிலுள்ளதை (எப்பொழுதும்) சிந்தனையில் வையுங்கள். (அதனால்) நீங்கள் இறையச்சமுடையவர்களாக ஆவீர்கள்'' (என்று கூறினோம்.)
الترجمة التاميلية
وَإِذۡ أَخَذۡنَا مِيثَٰقَكُمۡ وَرَفَعۡنَا فَوۡقَكُمُ ٱلطُّورَ خُذُواْ مَآ ءَاتَيۡنَٰكُم بِقُوَّةٖ وَٱذۡكُرُواْ مَا فِيهِ لَعَلَّكُمۡ تَتَّقُونَ
இன்னும், நாம் உங்களிடம் வாக்குறுதி வாங்கி, 'தூர் மலையை உங்கள் மேல் உயர்த்தி, "நாம் உங்களுக்கு கொடுத்த (வேதத்)தை உறுதியுடன் பற்றிக் கொள்ளுங்குள்; அதிலுள்ளவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். (அப்படிச் செய்வீர்களானால்) நீங்கள் பயபக்தியுடையோர் ஆவீர்கள்" (என்று நாம் கூறியதையும் நினைவு கூறுங்கள்).
Jan Trust Foundation - Tamil translation
உங்களுக்கு மேல் மலையை உயர்த்தி உங்கள் உறுதி மொழியை நாம் வாங்கிய சமயத்தை நினைவு கூருங்கள். "நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுவதற்காக நாம் உங்களுக்குக் கொடுத்த (தவ்றாத்)தை பலமாகப் (பற்றிப்) பிடியுங்கள். அதில் உள்ளதை நினைவு கூருங்கள்.
الترجمة التاميلية - عمر شريف