91. அல்லாஹ் சந்ததி எடுத்துக்கொள்ளவில்லை. அவனுடன் வணக்கத்திற்குரிய வேறு இறைவனுமில்லை. அவ்வாறாயின் ஒவ்வொரு இறைவனும் தான் படைத்தவற்றைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டு, ஒருவர் மற்றவர் மீது போர் புரிய ஆரம்பித்து விடுவர். (நிராகரிக்கும்) இவர்கள் வர்ணிக்கும் இத்தகைய வர்ணிப்புகளை விட்டும் அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன்.
الترجمة التاميلية
مَا ٱتَّخَذَ ٱللَّهُ مِن وَلَدٖ وَمَا كَانَ مَعَهُۥ مِنۡ إِلَٰهٍۚ إِذٗا لَّذَهَبَ كُلُّ إِلَٰهِۭ بِمَا خَلَقَ وَلَعَلَا بَعۡضُهُمۡ عَلَىٰ بَعۡضٖۚ سُبۡحَٰنَ ٱللَّهِ عَمَّا يَصِفُونَ
அல்லாஹ் தனக்கென ஒரு மகனை எடுத்துக் கொள்ளவில்லை. அவனுடன் (வேறு) நாயனுமில்லை அவ்வாறாயின் (அவர்கள் கற்பனை செய்யும்) ஒவ்வோர் நாயனும் தான் படைத்தவற்றை(த் தன்னுடன் சேர்த்து)க் கொண்டு போய் சிலர் சிலரைவிட மிகைப்பார்கள். (இவ்வாறெல்லாம்) இவர்கள் வர்ணிப்பதை விட்டும் அல்லாஹ் மிகவும் தூயவன்.
Jan Trust Foundation - Tamil translation
அல்லாஹ் (தனக்கு) எந்த ஒரு குழந்தையையும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. (படைப்புகளை படைத்தபோது) அவனுடன் எந்தக் கடவுளும் இருக்கவில்லை. அப்படி இருந்திருந்தால் ஒவ்வொரு கடவுளும் தான் படைத்ததை (தனியாக) கொண்டு சென்று விடுவார்கள். இன்னும் சிலர், சிலர் மீது ஆதிக்கம் செலுத்தி (வென்று) இருப்பார்கள். அவர்கள் வர்ணிக்கின்றவற்றை விட்டு அல்லாஹ் மகா பரிசுத்தமானவன். (அவனுக்கு குழந்தையும் இல்லை, பங்காளியும் இல்லை, வேறு கடவுளும் இல்லை.)
الترجمة التاميلية - عمر شريف