224. நீங்கள் நன்மை செய்வதற்கோ அல்லது இறைவனை அஞ்சிக் கொள்வதற்கோ அல்லது மனிதர்களுக்கிடையில் சமாதானம் செய்து வைப்பதற்கோ தடையாக ஏற்படக்கூடிய விதத்தில் நீங்கள் செய்யும் சத்தியங்களுக்கு அல்லாஹ்வை இலக்காக்காதீர்கள். அல்லாஹ் (சத்தியத்தை) நன்கு செவியுறுபவன், (மனதில் உள்ளதை) நன்கறிபவன் ஆவான்.
الترجمة التاميلية
وَلَا تَجۡعَلُواْ ٱللَّهَ عُرۡضَةٗ لِّأَيۡمَٰنِكُمۡ أَن تَبَرُّواْ وَتَتَّقُواْ وَتُصۡلِحُواْ بَيۡنَ ٱلنَّاسِۚ وَٱللَّهُ سَمِيعٌ عَلِيمٞ
இன்னும், நீங்கள் அல்லாஹ்வைக் கொண்டு சத்தியம் செய்வதனால், நீங்கள் நற்கருமங்கள் செய்தல், இறைபக்தியுடன் நடத்தல், மனிதர்களிடையே சமாதானம் செய்து வைத்தல் போன்றவற்றில் அவனை ஒரு தடையாகச் செய்துவிடாதீர்கள்;. அல்லாஹ் யாவற்றையும் செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.
Jan Trust Foundation - Tamil translation
நீங்கள் நன்மை செய்ய மாட்டீர்கள். அல்லாஹ்வை அஞ்சமாட்டீர்கள் மற்றும் மக்களுக்கு மத்தியில் சீர்திருத்தம் செய்ய மாட்டீர்கள் என்ற உங்கள் சத்தியங்களுக்கு வலுவாக அல்லாஹ்வை ஆக்காதீர்கள். அல்லாஹ் செவியுறுபவன், மிக அறிபவன்.
الترجمة التاميلية - عمر شريف