260. இப்றாஹீம் (இறைவனை நோக்கி), “என் இறைவனே! இறந்தவர்களை நீ எப்படி உயிர்ப்பிக்கிறாய். (அதை) நீ எனக்குக் காண்பி'' எனக் கூறியபோது, அவன் (இதை) ‘‘நீர் நம்பவில்லையா?'' என்று கேட்டான். (அதற்கு) அவர் ‘‘நான் நம்பியே இருக்கின்றன். ஆயினும், (அதை என் கண்ணால் கண்டு) என் உள்ளம் திருப்தியடைவதற்காக (அதைக் காண்பி)'' எனக் கூறினார். (அதற்கவன்) ‘‘நான்கு பறவைகளைப் பிடித்து நீர் அவற்றைப் பழக்கி, பின்னர் (அவற்றைத் துண்டு துண்டாக ஆக்கி) அவற்றில் ஒவ்வொரு பாகத்தை ஒவ்வொரு மலையின் மீதும் வைத்துவிட்டு (நடுவில் இருந்துகொண்டு) அவற்றை நீர் கூப்பிடுவீராக. அவை உம்மிடம் பறந்து வந்து சேரும் (எனக் கூறி, அவ்வாறு செய்து காண்பித்து) ‘‘நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், மிக்க நுண்ணறிவுடையவன் என்பதையும் நீர் உறுதியாக அறிந்து கொள்வீராக'' என்றான்.
الترجمة التاميلية
وَإِذۡ قَالَ إِبۡرَٰهِـۧمُ رَبِّ أَرِنِي كَيۡفَ تُحۡيِ ٱلۡمَوۡتَىٰۖ قَالَ أَوَلَمۡ تُؤۡمِنۖ قَالَ بَلَىٰ وَلَٰكِن لِّيَطۡمَئِنَّ قَلۡبِيۖ قَالَ فَخُذۡ أَرۡبَعَةٗ مِّنَ ٱلطَّيۡرِ فَصُرۡهُنَّ إِلَيۡكَ ثُمَّ ٱجۡعَلۡ عَلَىٰ كُلِّ جَبَلٖ مِّنۡهُنَّ جُزۡءٗا ثُمَّ ٱدۡعُهُنَّ يَأۡتِينَكَ سَعۡيٗاۚ وَٱعۡلَمۡ أَنَّ ٱللَّهَ عَزِيزٌ حَكِيمٞ
இன்னும், இப்ராஹீம்; "என் இறைவா! இறந்தவர்களை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கிறாய் என்பதை எனக்குக் காண்பிப்பாயாக!" எனக் கோரியபோது, அவன், நீர் (இதை) நம்ப வில்லையா?" எனக் கேட்டான்; "மெய்(யாக நம்புகிறேன்!) ஆனால் என் இதயம் அமைதிபெறும் பொருட்டே (இவ்வாறு கேட்கிறேன்)" என்று கூறினார்; "(அப்படியாயின்,) பறவைகளிலிருந்து நான்கைப்பிடித்து, (அவை உம்மிடம் திரும்பி வருமாறு) பழக்கிக்கொள்ளும்; பின்னர்(அவற்றை அறுத்து) அவற்றின் ஒவ்வொரு பாகத்தை ஒவ்வொரு மலையின் மீது வைத்து விடும்;. பின், அவற்றைக் கூப்பிடும்; அவை உம்மிடம் வேகமாய்(ப் பறந்து) வரும்;. நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், பேரறிவாளன் என்பதை அறிந்து கொள்ளும்" என்று (அல்லாஹ்) கூறினான்.
Jan Trust Foundation - Tamil translation
இப்றாஹீம் "என் இறைவா! இறந்தவர்களை எப்படி உயிர்ப்பிக்கிறாய் என்பதை எனக்குக் காட்டு'' எனக் கூறிய சமயத்தை நினைவு கூறுவீராக! "நீர் நம்பிக்கை கொள்ளவில்லையா?'' எனக் கூறினான். அவ்வாறில்லை. "(நான் நம்பியே இருக்கிறேன்.) எனினும், என் உள்ளம் நிம்மதி பெறுவதற்காக (அதைக் காட்டு)'' எனக் கூறினார். பறவைகளில் நான்கைப் பிடித்து, அவற்றை உம் பக்கம் பழக்குவீராக! பிறகு (அவற்றைப் பல துண்டுகளாக்கி) அவற்றிலிருந்து ஒரு பாகத்தை ஒவ்வொரு மலையின் மீதும் ஆக்குவீராக! பிறகு அவற்றைக் கூப்பிடுவீராக! அவை உம்மிடம் விரைந்து வரும். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், ஞானவான் என்பதை அறிந்து கொள்வீராக!'' என்று கூறினான்.
الترجمة التاميلية - عمر شريف