62. எந்த ஓர் ஆத்மாவையும் அதன் சக்திக்கு அதிகமாக (எதையும் செய்யும்படி) நாம் நிர்ப்பந்திப்பதில்லை. (ஒவ்வொருவரின்) உண்மையை உரைக்கும் தினசரிக் குறிப்பும் நம்மிடம் இருக்கிறது. (அவர்களின் நன்மையைக் குறைத்தோ பாவத்தை அதிகப்படுத்தியோ) அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.
الترجمة التاميلية
وَلَا نُكَلِّفُ نَفۡسًا إِلَّا وُسۡعَهَاۚ وَلَدَيۡنَا كِتَٰبٞ يَنطِقُ بِٱلۡحَقِّ وَهُمۡ لَا يُظۡلَمُونَ
நாம் எந்த ஆத்மாவையும், அதன் சக்திக்கு ஏற்றவாறு அல்லாமல் (அதிகம் செய்யுமாறு) நிர்ப்பந்திக்க மாட்டோம்; மேலும் உண்மையை பேசும் ஒரு (பதிவுப்) புத்தகம் நம்மிடம் இருக்கிறது இன்னும் அவர்களுக்கு (ஒரு சிறிதும்) அநியாயம் செய்யப்பட மாட்டாது.
Jan Trust Foundation - Tamil translation
எந்த ஓர் ஆன்மாவுக்கும் அதன் வசதிக்கு உட்பட்டே தவிர நாம் சிரமம் தருவதில்லை. நம்மிடம் (படைப்பினங்களுடைய செயல்கள் எழுதப்பட்ட) சத்தியத்தைக் கொண்டு பேசுகின்ற ஒரு புத்தகம் இருக்கின்றது. (கூடுதல் குறைவின்றி அடியார்களின் செயலை அறிவிக்கின்ற புத்தகம் அது.) அவர்கள் அநீதியிழைக்கப்பட மாட்டார்கள்.
الترجمة التاميلية - عمر شريف