80. அவனே உயிர் கொடுக்கிறான்; மரணிக்கவும் செய்விக்கிறான். இரவு பகல் மாறி மாறி வருவதும் அவனுடைய கட்டளையினாலேயே! இவ்வளவு கூட நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?
الترجمة التاميلية
وَهُوَ ٱلَّذِي يُحۡيِۦ وَيُمِيتُ وَلَهُ ٱخۡتِلَٰفُ ٱلَّيۡلِ وَٱلنَّهَارِۚ أَفَلَا تَعۡقِلُونَ
அவனே உயிர் கொடுக்கிறான்; இன்னும் அவனே மரணிக்கச் செய்கிறான்; மற்றும், இரவும் பகலும் மாறி மாறி வருவதும் அவனுக்குரியதே! (இவற்றை) நீங்கள் விளங்கிக் கொள்ளமாட்டீர்களா?
Jan Trust Foundation - Tamil translation
அவன்தான் உயிர் கொடுக்கின்றான்; இன்னும் மரணத்தை தருகிறான். இரவு பகல் மாறிமாறி வருவதும் அவனுடையதுதான். (-அவன்தான் இரவு பகலை மாறிமாறி வரச் செய்கின்றான்.) நீங்கள் சிந்தித்து புரிய மாட்டீர்களா?
الترجمة التاميلية - عمر شريف