36. அந்தத் தூதர் ஸுலைமானிடம் வரவே (ஸுலைமான் அவரை நோக்கி) ‘‘ நீங்கள் பொருளைக் கொண்டு எனக்கு உதவி செய்யக் கருதுகிறீர்களா? அல்லாஹ் எனக்குக் கொடுத்து இருப்பவை உங்களுக்குக் கொடுத்திருப்பவற்றை விட (அதிகமாகவும்) மேலானதாகவும் இருக்கின்றன. மாறாக, உங்கள் இக்காணிக்கையைக் கொண்டு நீங்களே சந்தோஷமடையுங்கள். (அது எனக்கு வேண்டியதில்லை) என்றும்,
الترجمة التاميلية
فَلَمَّا جَآءَ سُلَيۡمَٰنَ قَالَ أَتُمِدُّونَنِ بِمَالٖ فَمَآ ءَاتَىٰنِۦَ ٱللَّهُ خَيۡرٞ مِّمَّآ ءَاتَىٰكُمۚ بَلۡ أَنتُم بِهَدِيَّتِكُمۡ تَفۡرَحُونَ
அவ்வாறே (தூதர்கள்) ஸுலைமானிடம் வந்தபோது அவர் சொன்னார்; "நீங்கள் எனக்குப் பொருளைக் கொண்டு உதவி செய்(ய நினைக்)கிறீர்களா? அல்லாஹ் எனக்குக் கொடுத்திருப்பது, உங்களுக்கு அவன் கொடுத்திருப்பதை விட மேலானதாகும்; எனினும், உங்கள் அன்பளிப்பைக் கொண்டு நீங்கள் தான் மகிழ்ச்சி அடைகிறீர்கள்!
Jan Trust Foundation - Tamil translation
அவர் (-அவளின் தூதர்) சுலைமானிடம் வந்தபோது, அவர் (சுலைமான்) கூறினார்: செல்வத்தை எனக்கு நீங்கள் தருகிறீர்களா? அல்லாஹ் எனக்கு தந்திருப்பது அவன் உங்களுக்கு தந்திருப்பதை விட மிகச் சிறந்தது. மாறாக, நீங்கள் உங்கள் அன்பளிப்புகளைக் கொண்டு பெருமிதம் அடைவீர்கள். (நான் அடைய மாட்டேன்.)
الترجمة التاميلية - عمر شريف