93. புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியன. (மறுமை வருவதற்குரிய) தன் அத்தாட்சிகளை அதி சீக்கிரத்தில் அவன் உங்களுக்குக் காண்பிப்பான். அச்சமயம், அவற்றை நீங்கள் (உண்மையென) அறிந்து கொள்வீர்கள். (தற்சமயம்) நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதைப் பற்றி (நபியே!) உமது இறைவன் பராமுகமாயில்லை'' என்று கூறுவீராக.
الترجمة التاميلية
وَقُلِ ٱلۡحَمۡدُ لِلَّهِ سَيُرِيكُمۡ ءَايَٰتِهِۦ فَتَعۡرِفُونَهَاۚ وَمَا رَبُّكَ بِغَٰفِلٍ عَمَّا تَعۡمَلُونَ
இன்னும் கூறுவீராக "எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே! அவன் சீக்கிரத்தில் உங்களுக்குத் தன் அத்தாட்சிகளைக் காண்பிப்பான்; அப்போது அவற்றை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்" மேலும் உம்முடைய இறைவன் நீங்கள் செய்வதை விட்டும் பராமுகமாக இல்லை.
Jan Trust Foundation - Tamil translation
(நபியே!) கூறுவீராக: எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே. அவன் தனது அத்தாட்சிகளை உங்களுக்கு காண்பிப்பான். அச்சமயம் அவற்றை நீங்கள் (உண்மையென) அறிந்து கொள்வீர்கள். (நபியே!) உமது இறைவன் நீங்கள் (-இணைவைப்பவர்கள்) செய்பவற்றை கவனிக்காதவனாக இல்லை. (அவர்கள் ஒரு தவணைக்காகவே விட்டு வைக்கப்படுகின்றனர். கண்டிப்பாக அவர்களுக்கு அழிவும், உமக்கு வெற்றியும் உண்டு.)பேரருளாளன் பேரன்பாளன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...
الترجمة التاميلية - عمر شريف