22. (இவ்வாறு கூறி) அதிக நேரமாகவில்லை. (அதற்குள் ஹுத்ஹுத் பறவை அவர் முன் தோன்றி) ‘‘ நீர் அறியாத ஒரு விஷயத்தை நான் அறிந்து கொண்டு ‘ஸபா'வைப் பற்றி நிச்சயமான (உண்மைச்) செய்தியைக் கொண்டு வந்திருக்கிறேன்.
الترجمة التاميلية
فَمَكَثَ غَيۡرَ بَعِيدٖ فَقَالَ أَحَطتُ بِمَا لَمۡ تُحِطۡ بِهِۦ وَجِئۡتُكَ مِن سَبَإِۭ بِنَبَإٖ يَقِينٍ
(இவ்வாறு கூறி) சிறிது நேரம் தாமதித்தார் அதற்குள் (ஹுது ஹுது வந்து) கூறிற்று "தாங்கள் அறியாத ஒரு விஷயத்தை நான் அறிந்து கொண்டேன். 'ஸபா'விலிருந்து உம்மிடம் உறுதியான செய்தியைக் கொண்டு வந்திருக்கிறேன்."
Jan Trust Foundation - Tamil translation
அவர் (ஹுத்ஹுதைப் பற்றி விசாரித்து விட்டு) சிறிது நேரம்தான் தாமதித்தார். (ஹுத்ஹுத் அவர் முன் வந்துவிட்டது. பின்னர்) அது கூறியது: “ஆக, நீர் அறியாததை நான் அறிந்துள்ளேன். உம்மிடம் ‘சபா’ இனத்தாரிடமிருந்து உறுதியான செய்தியைக் கொண்டு வந்துள்ளேன்.
الترجمة التاميلية - عمر شريف