42. அவள் வந்து சேரவே (அவளை நோக்கி) ‘‘ உனது அரச கட்டில் இவ்வாறுதானா இருக்கும்?'' என்று கேட்கப்பட்டதற்கு அவள் ‘‘ இது முற்றிலும் அதைப் போலவே இருக்கிறது. இதற்கு முன்னதாகவே (உமது மேன்மையைப் பற்றிய) விஷயம் எங்களுக்கு அறிவிக்கப்பட்டு விட்டது. நாங்கள் முற்றிலும் கட்டுப்பட்டே வந்திருக்கிறோம்'' என்றாள்.
الترجمة التاميلية
فَلَمَّا جَآءَتۡ قِيلَ أَهَٰكَذَا عَرۡشُكِۖ قَالَتۡ كَأَنَّهُۥ هُوَۚ وَأُوتِينَا ٱلۡعِلۡمَ مِن قَبۡلِهَا وَكُنَّا مُسۡلِمِينَ
ஆகவே, அவள் வந்த பொழுது, "உன்னுடைய அரியாசனம் இது போன்றதா?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவள்; "நிச்சயமாக இது அதைப் போலவே இருக்கிறது" என்று கூறினாள்; இந்தப் பெண்மணிக்கு முன்பே நாங்கள் ஞானம் கொடுக்கப்பட்டு விட்டோம், நாங்கள் முஸ்லிம்களாகவும் இருக்கிறோம் (என்று ஸுலைமான் கூறினார்).
Jan Trust Foundation - Tamil translation
அவள் வந்தபோது, “இது போன்றா உனது அரச கட்டில்?” என்று கேட்கப்பட்டது. அவள் கூறினாள்: “இது அதைப் போன்றுதான்.” (பின்னர் சுலைமான் கூறினார்:) இவளுக்கு முன்னரே நாம் (அல்லாஹ்வைப் பற்றியும் அவனுடைய ஆற்றலைப் பற்றியும்) அறிவு கொடுக்கப்பட்டோம். இன்னும், முஸ்லிம்களாக இருக்கிறோம்.
الترجمة التاميلية - عمر شريف