44. பின்னர் ‘‘ இம்மாளிகையில் நுழை'' என்று அவளுக்குக் கூறப்பட்டது. அவள் அதைக் கண்டு (அதன் தரையில் பதிக்கப்பட்டிருந்த பளிங்கு கற்களை) தண்ணீர் என்று எண்ணி ஆடையை (அது நனைந்து போகாதிருக்க) இரு கெண்டைக்கால்களில் இருந்து உயர்த்தினாள். அதற்கு (ஸுலைமான்) ‘‘ நிச்சயமாக அது (தண்ணீரல்ல) பளிங்கு கற்கள் பதிக்கப்பட்ட மாளிகைதான்'' என்று கூறினார். அதற்கவள் ‘‘ என் இறைவனே! நிச்சயமாக நானே எனக்குத் தீங்கிழைத்துக் கொண்டிருந்தேன். உலகத்தாரின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கு ஸுலைமானுடன் நானும் முற்றிலும் கட்டுப்படுகிறேன்'' என்று கூறினாள்.
الترجمة التاميلية
قِيلَ لَهَا ٱدۡخُلِي ٱلصَّرۡحَۖ فَلَمَّا رَأَتۡهُ حَسِبَتۡهُ لُجَّةٗ وَكَشَفَتۡ عَن سَاقَيۡهَاۚ قَالَ إِنَّهُۥ صَرۡحٞ مُّمَرَّدٞ مِّن قَوَارِيرَۗ قَالَتۡ رَبِّ إِنِّي ظَلَمۡتُ نَفۡسِي وَأَسۡلَمۡتُ مَعَ سُلَيۡمَٰنَ لِلَّهِ رَبِّ ٱلۡعَٰلَمِينَ
அவளிடம்; "இந்த மாளிகையில் பிரவேசிப்பீராக!" என்று சொல்லப்பட்டது அப்போது அவள் (அம் மாளிகையின் தரையைப் பார்த்து) அதைத் தண்ணீர்த் தடாகம் என்று எண்ணிவிட்டாள்; எனவே (தன் ஆடை நனைந்து போகாமலிருக்க அதைத்;) தன் இரு கெண்டைக் கால்களுக்கும் மேல் உயர்த்தினாள், (இதைக் கண்ணுற்ற ஸுலைமான்), "அது நிச்சயமாகப் பளிங்குகளால் பளபளப்பாகக் கட்டப்பட்ட மாளிகைதான்!" என்று கூறினார். (அதற்கு அவள்) "இறைவனே! நிச்சயமாக, எனக்கு நானே அநியாயம் செய்து கொண்டேன்; அகிலங்களுக்கெல்லாம் இறைவனான அல்லாஹ்வுக்கு, ஸுலைமானுடன் நானும் முற்றிலும் வழிபட்டு) முஸ்லிமாகிறேன்" எனக் கூறினாள்.
Jan Trust Foundation - Tamil translation
அவளுக்கு கூறப்பட்டது: “நீ மாளிகையில் நுழை!” அவள் அதைப் பார்த்த போது அதை அலை அடிக்கும் நீராகக் கருதி, தன் இரு கெண்டைக் கால்களை விட்டும் (தன் ஆடையை) அகற்றினாள். (அப்போது சுலைமான்) கூறினார்: நிச்சயமாக இது (-இந்த மாளிகையின் தரை) கண்ணாடிகளால் சமப்படுத்தப்பட்ட (மொழுவப்பட்ட, உருவாக்கப்பட்ட) மாளிகை(யின் தரை)யாகும்.” அவள், கூறினாள்: “என் இறைவா! நிச்சயமாக நான் எனக்கே அநீதி செய்து கொண்டேன். இன்னும், அகிலங்களின் இறைவனான அல்லாஹ்விற்கு சுலைமானுடன் நானும் முஸ்லிமாகி விட்டேன்.
الترجمة التاميلية - عمر شريف