ترجمة معاني سورة الرحمن
باللغة التاميلية من كتاب الترجمة التاميلية - عمر شريف
.
ﰡ
நிகழக்கூடிய மறுமை நிகழ்ந்து விட்டால்,
அவன், குர்ஆனை கற்பித்தான்;
அவனுக்கு தெளிவான விளக்கங்களை கற்பித்தான்.
சூரியனும் சந்திரனும் (அல்லாஹ் நிர்ணயித்த ஒரு தவணைக்காக அவை ஒவ்வொன்றுக்கும் உள்ள நிலைகளை நோக்கி அல்லாஹ்விடம் முடிவு செய்யப்பட்ட) ஒரு கணக்கின் படி ஓடுகின்றன.
(தண்டுகள் இல்லாத) செடிகொடிகளும் மரங்களும் (அல்லாஹ்விற்கு) சிரம் பணிகின்றன.
வானத்தை - அதை (பூமிக்கு மேல்) உயர்த்தினான். தராசை -நீதத்தை (பின்பற்றப்பட வேண்டிய கட்டாய சட்டமாக) அமைத்தான்.
தராசில் நீங்கள் எல்லை மீறாதீர்கள். (அநியாயம் செய்யாதீர்கள்!)
நிறுவையை (தராசின் நாக்கை சரியாக நடுவில்) நீதமாக நிறுத்துங்கள்! தராசில் (பொருள்களை குறைத்து) நஷ்டப்படுத்தாதீர்கள்.
பூமி - அதை படைப்பினங்களுக்காக (-அவை வாழ்வதற்காக) அவன் அமைத்தான்.
அதில் பழங்களும் குலைகளுடைய பேரீச்ச மரங்களும் இருக்கின்றன.
வைக்கோல் உடைய தானியங்களும் (மற்ற) உணவுகளும் அதில் இருக்கின்றன.
(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?
சுட்ட களிமண்ணைப் போல் உள்ள சுடாத காய்ந்த களிமண்ணிலிருந்து மனிதனை படைத்தான்.
நெருப்பின் (சிவப்பும் மஞ்சளும் கலந்த) நடு ஜுவாலையில் இருந்து ஜின்களைப் படைத்தான்.
(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?
இரு கிழக்கு திசைகள், இன்னும் இரு மேற்கு திசைகளின் இறைவன் அவன்.
(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?
(வானம், இன்னும் பூமியின்) இரு கடல்களும் சந்திப்பதற்கு அவன் விட்டுவிட்டான்.
அவை இரண்டுக்கும் இடையில் தடை இருக்கிறது. அவை இரண்டும் எல்லையைக் கடக்காது.
(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?
அவை இரண்டிலிருந்தும் முத்தும் பவளமும் உற்பத்தியாகின்றன.
(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?
மலைகளைப் போல் கடலில் (பாய் மரத்துணிகள்) விரிக்கப்பட்ட கப்பல்கள் அவனுக்கே உரியன. (அவன்தான் அவற்றை மிதக்கவும் பயணிக்கவும் வைத்தான்.)
(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?
அதன் மீது இருக்கின்ற எல்லோரும் அழிபவர்கள்தான்.
பெரும் கம்பீரத்திற்கும் கண்ணியத்திற்கும் உரியவனான உமது இறைவனின் முகம்தான் நிலையாக நீடித்து இருக்கும்.
(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?
வானங்களில், பூமியில் உள்ளவர்கள் (எல்லாம்) அவனிடமே (தங்கள் தேவைகளைக் கேட்டு) யாசிக்கின்றன. ஒவ்வொரு நாளும் அவன் ஒரு காரியத்தில் இருக்கின்றான்.
(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?
மனித, ஜின் வர்க்கத்தினரே உங்களுக்காக (-உங்களை விசாரித்து கூலி கொடுப்பதற்காக) நாம் ஒதுங்குவோம்.
(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?
ஜின் இன்னும் மனித சமூகத்தவர்களே! (அல்லாஹ்வின் தண்டனைகளில் இருந்து தப்பிக்க) வானங்கள், இன்னும் பூமியின் கோடிகளில் நீங்கள் விரண்டு ஓட உங்களால் முடிந்தால் ஓடுங்கள்! (அல்லாஹ்வின்) அதிகாரத்தை கொண்டே தவிர நீங்கள் ஓட முடியாது.
(ஜின் இன்னும் மனித வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?
நெருப்பின் ஜுவாலையும் உருக்கப்பட்ட செம்பும் உங்கள் இருவர் மீதும் அனுப்பப்படும். நீங்கள் (என்னிடம்) பழிதீர்க்க முடியாது.
(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?
வானம் பிளந்து விட்டால் அது காய்ந்த எண்ணையைப் போல் ரோஜா நிறத்தில் ஆகிவிடும்.
(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?
அந்நாளில் மனிதர்களோ ஜின்களோ தத்தமது குற்றங்களைப் பற்றி விசாரிக்கப்பட மாட்டார்கள். (நல்லவர் யார், தீயவர் யார் என்று விசாரித்து தான் அறிய வேண்டும் என்ற அவசியம் இல்லை.)
(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?
குற்றவாளிகள் அவர்களின் முக அடையாளத்தைக் கொண்டு அறியப்பட்டு விடுவார்கள். உச்சிமுடிகளையும் பாதங்களையும் பிடிக்கப்படும்.
(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?
இதுதான் அந்த குற்றவாளிகள் பொய்ப்பிக்கின்ற நரகமாகும்.
அ(ந்த நரக நெருப்பி)ற்கு மத்தியிலும் கடுமையாக கொதிக்கின்ற சுடு நீருக்கு மத்தியிலும் அவர்கள் சுற்றி வருவார்கள்.
(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?
தன் இறைவனுக்கு முன் தான் நிற்பதை பயந்தவருக்கு இரண்டு சொர்க்கங்கள் உண்டு.
(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?
(அந்த இரண்டு சொர்க்கங்களும்) பல நிறங்களுடையவையாகும். (பல வகையான இன்பங்களுடையவையாகும்)
(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?
அவை இரண்டிலும் இரண்டு ஊற்றுகள் ஓடும்.
(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?
அவை இரண்டிலும் எல்லா பழங்களிலும் (பசுமையானதும் உலர்ந்ததும் ஆகிய) இரண்டு வகைகள் உண்டு.
(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?
விரிப்புகளில் சாய்ந்தவர்களாக அவர்கள் இருப்பார்கள். அவற்றின் உள்பக்கங்கள் மொத்தமான பட்டினால் ஆனதாக இருக்கும். இரண்டு சொர்க்கங்களின் கனிகளும் (உண்ண விரும்புபவர்களுக்கு மிக) நெருக்கமாக இருக்கும்.
(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?
அவற்றில் (அந்த விரிப்புகளில் கணவனைத் தவிர மற்ற ஆண்களை விட்டும்) பார்வைகளை தாழ்த்திய பெண்கள் இருப்பார்கள். இவர்களுக்கு முன்னர் எந்த ஒரு மனிதரும் எந்த ஒரு ஜின்னும் அவர்களை தொட்டு இருக்க மாட்டார்கள்.
(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?
அவர்கள் மாணிக்கத்தைப் போலும் பவளத்தைப் போலும் இருப்பார்கள்.
(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?
(உலகில் அல்லாஹ்வை பயந்தவர் செய்த) நன்மைக்கு கூலி (மறுமையில் அல்லாஹ் அவருக்கு கொடுக்கின்ற சொர்க்கம் என்ற) நன்மையைத் தவிர வேறு உண்டா?
(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?
அந்த இரண்டையும் விட தகுதியால் குறைந்த (வேறு) இரண்டு சொர்க்கங்களும் உண்டு.
(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?
(அவற்றில் மிக அடர்த்தியான பச்சை பசுமையான மரங்கள் இருப்பதால்) அவை இரண்டும் (தூரத்தில் இருந்து பார்ப்பதற்கு) கருமையாக இருக்கும்.
(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?
அவை இரண்டிலும் பொங்கி எழக்கூடிய இரு ஊற்றுகள் இருக்கும்.
(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?
அவை இரண்டிலும் (பல வகை) பழங்களும் பேரித்த மரங்களும் மாதுளை மரங்களும் இருக்கும்.
(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?
அவற்றில் (குணத்தால்) சிறந்த பெண்கள், (முகத்தால்) பேரழகிகள் இருப்பார்கள்.
(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?
(அந்த பெண்கள்) வெள்ளைநிற அழகிகள், (அவர்களுக்குரிய) இல்லங்களில் (அவர்களின் கணவன்மார்களுக்காக மட்டும் அவர்கள்) ஒதுக்கப்பட்டவர்கள். (கணவனைத் தவிர வேறு யாரையும் அவர்கள் நாட மாட்டார்கள்.)
(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?
இவர்களுக்கு முன்னர் எந்த ஒரு மனிதரும் எந்த ஒரு ஜின்னும் அவர்களைத் தொட்டு இருக்க மாட்டார்கள்.
(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?
(சொர்க்க வாசிகள்) பச்சை நிற தலையணைகளின் மீதும், மிக அழகான (மிக நேர்த்தியான) விரிப்புகளின் மீதும் சாய்தவர்களாக இருப்பார்கள்.
(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?
கம்பீரத்திற்கும் கண்ணியத்திற்கும் உரியவனாகிய உமது இறைவனின் பெயர் மிக அருள் நிறைந்தது.