ترجمة معاني سورة ق
 باللغة التاميلية من كتاب الترجمة التاميلية - عمر شريف
            .
            
                            
            
                                                                                                            ﰡ
                                                                                        
                    
                                                                                    வேகமாக வீசக்கூடிய காற்றுகள் மீது சத்தியமாக!
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    மாறாக, (அவர்களோ) அவர்களில் இருந்தே (-மனித இனத்தில் இருந்தே) ஓர் எச்சரிப்பாளர் அவர்களிடம் வந்ததால் அவர்கள் ஆச்சரியப்பட்டனர். ஆகவே, நிராகரிப்பாளர்கள், “இது ஒரு மிக ஆச்சரியமான விஷயம்” என்று கூறி (நபியை மறுத்த)னர். (அப்போது உங்கள் கெட்ட முடிவை மறுமையில் பார்ப்பீர்கள் என்று நபி அவர்களை எச்சரித்தார்கள். அதற்கு அவர்கள் கூறியதாவது:)
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    நாங்கள் இறந்து, மண்ணாக ஆகிவிட்டாலுமா (-மீண்டும் உயிருடன் நாங்கள் எழுப்பப்பட்டு தண்டனை கொடுக்கப்படுவோம்)? அது (-இறந்தபின் எழுப்பப்படுவது) தூரமான மீட்சியாகும்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    அவர்களி(ன் உடல்களி)ல் பூமி குறைப்பதை (-தின்று அழித்துவிடுவதை) திட்டமாக நாம் அறிவோம். நம்மிடம் (நன்கு) பாதுகாக்கக்கூடிய பதிவு நூல் இருக்கிறது. (அதில் இவை எல்லாம் தெளிவாக பதியப்படுகிறது. அது மிக்க பாதுகாப்பானது.)
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    மாறாக, அவர்கள் உண்மையை (-இந்த குர்ஆனை), அது அவர்களிடம் வந்தபோது பொய்ப்பித்தனர். அவர்கள் குழப்பமான ஒரு விஷயத்தில் இருக்கின்றனர்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    அவர்கள் தங்களுக்கு மேல் உள்ள வானத்தை, “நாம் அதை எப்படி படைத்தோம்? அதை எப்படி அலங்கரித்தோம்? அதில் பிளவுகள் (-கீறல்கள், வெடிப்புகள்) இல்லை என்பதை (அவர்கள்) பார்க்கவில்லையா?
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    இன்னும் பூமியை நாம் விரித்தோம். அதில் பெரிய மலைகளை அமைத்தோம். இன்னும் அதில் அழகான எல்லா வகையான தாவரங்களை முளைக்க வைத்தோம்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    (அல்லாஹ்வின் பக்கம்) திரும்பக்கூடிய எல்லா அடியார்களுக்கும் (அவர்கள் இறை அத்தாட்சிகளை) உற்று நோக்குவதற்காகவும் (அவற்றின் மூலம்) படிப்பினை பெறுவதற்காகவும் (நமது வசனங்களை விவரிக்கின்றோம்).
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    நாம் வானத்தில் இருந்து அருள் நிறைந்த நீரை இறக்கினோம். அதன் மூலம் தோட்டங்களையும் அறுவடை செய்யப்படும் தானியங்களையும் முளைக்க வைத்தோம்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    இன்னும் உயரமான பேரித்த மரங்களையும் (நாம் முளைக்க வைத்தோம்). அவற்றில் அடர்த்தியான குலைகள் இருக்கின்றன.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    அடியார்களுக்கு உணவாக இருப்பதற்காக (இவற்றை நாம் முளைக்க வைத்தோம்). அதன் மூலம் (-மழைநீர் மூலம்) இறந்த பூமியை நாம் உயிர்ப்பிப்போம். இவ்வாறுதான் (மண்ணறையில் இருந்து உயிருடன் அடியார்கள்) வெளியேறுவதும் நடக்கும்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    இவர்களுக்கு முன்னர் நூஹுடைய மக்களும் கிணற்றுடையவர்களும் சமூது மக்களும் பொய்ப்பித்தனர்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    இன்னும் ஆது மக்களும் ஃபிர்அவ்னும் லூத்துடைய சகோதரர்களும் (பொய்ப்பித்தனர்).
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    தோட்டக்காரர்களும் துப்பஃ உடைய மக்களும் (இவர்கள்) எல்லோரும் தூதர்களை பொய்ப்பித்தனர். ஆகவே, என் எச்சரிக்கை உறுதியாகிவிட்டது.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    முதல் முறை படைத்ததினால் நாம் பலவீனமாக ஆகிவிட்டோமா? (இல்லையே). மாறாக, அவர்கள் (இறந்தபின் மறுமையில்) புதிதாக படைக்கப்படுவதில் குழப்பத்தில் இருக்கின்றனர்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    திட்டவட்டமாக நாம் மனிதனை படைத்தோம். அவனது உள்ளம் அவனிடம் எதை கிசுகிசுக்கிறதோ அதை நாம் அறிவோம். நாம் அவனுக்கு (அவனுடைய) கழுத்தின் நரம்பைவிட மிக நெருக்கமானவர்கள் (அவன் மனதிற்குள் பேசுவதையும் நாம் மிக அறிவோம், அவன் மீது நாம் முழு ஆதிக்கமுடையவர்கள் ஆவோம்.)
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    சந்திக்கின்ற இரு வானவர்கள் சந்திக்கின்ற போது (நாம் மனிதனுக்கு மிக அருகில் இருக்கின்றோம்). வலது பக்கத்திலும் இடது பக்கத்திலும் (ஒவ்வொரு பக்கத்திலும்) கண்காணிப்பவர் இருப்பார்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    பேச்சில் எதையும் அவன் பேச மாட்டான், அவனிடம் கண்காணிப்பாளர், ஆஜராகி இருப்பவர் (ஆகிய இரு வானவர்கள்) இருந்தே தவிர.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    மரணத்தின் மயக்கம் உண்மையாக வந்துவிட்டது. அது (-அந்த மரணம்) தான் (இது நாள் வரை) நீ அதை விட்டு விலகி ஓடுபவனாக இருந்தாய்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    (அப்போது) சூரில் ஊதப்படும். அதுதான் எச்சரிக்கப்பட்ட நாள்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    எல்லா ஆன்மாவும் அதனுடன் (அதை) ஓட்டிவருபவரும் (அதற்கு) சாட்சி சொல்பவரும் இருக்கின்ற நிலையில் வரும்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    திட்டவட்டமாக இதை மறந்த நிலையில் நீ இருந்தாய். உன்னை விட்டும் உனது திரையை நாம் அகற்றினோம். ஆகவே, இன்றைய தினம் உனது பார்வை மிகக் கூர்மையானதாக இருக்கும்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    அவனுடைய நண்பர் (-உலகில் மனிதனின் செயல்களை கண்காணித்து பதிவு செய்வதற்காக அவனுடன் நிர்ணயிக்கப்பட்ட வானவர்) கூறுவார்: “இது (-இவர் உலகில் செய்த அமல்) என்னிடம் தயாராக (பாதுகாக்கப்பட்டு) இருக்கிறது.”
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    (மனிதனுடன் நிர்ணயிக்கப்பட்ட இரு வானவர்களே!) நிராகரிப்பாளர்(கள்), முரண்டுபிடிப்பவர்(கள்) ஆகிய எல்லோரையும் நீங்கள் இருவரும் நரகத்தில் தள்ளுங்கள்!
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    செல்வத்தை (தர்மம் செய்யாமல்) தடுப்பவர்(கள்), (மக்கள் மீது தனது சொல்லாலும் செயலாலும்) எல்லை மீறுபவர்(கள்), (அல்லாஹ்வின் விஷயத்தில் அதிகம்) சந்தேகிப்பவர்(கள் ஆகிய எல்லோரையும் நரகத்தில் தள்ளுங்கள்)!
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    எவர் அல்லாஹ்வுடன் வேறு ஒரு கடவுளை ஏற்படுத்தினாரோ அவரையும் கடுமையான வேதனையில் நீங்கள் (இருவரும்) தள்ளுங்கள்!
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    அவனுடைய நண்பன் (-மனிதனுடன் உலகில் இணைந்திருந்த ஷைத்தான்) கூறுவான்: எங்கள் இறைவா! நான் அவனை (உனது மார்க்கத்தை) மீறச் செய்யவில்லை. எனினும், அவன்தான் தூரமான வழிகேட்டில் இருந்தான்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    அல்லாஹ் கூறுவான்: “என்னிடம் தர்க்கம் செய்யாதீர்கள். நான் உங்களுக்கு திட்டமாக எச்சரிக்கையை முற்படுத்திவிட்டேன்.”
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    (இணைவைத்தவர்கள் விஷயத்தில்) என்னிடம் பேச்சுகள் மாற்றப்படாது. நான் அடியார்களுக்கு அறவே அநியாயம் செய்பவனாக இல்லை.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    நீ நிரம்பிவிட்டாயா? என்று நரகத்திடம் நாம் கூறுகின்ற நாளில் (நான் யாருக்கும் அறவே அநியாயம் செய்ய மாட்டேன்). அது கூறும்: “இன்னும் அதிகம் இருக்கிறதா?”
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    இறையச்சமுள்ளவர்களுக்கு சொர்க்கம் தூரமின்றி சமீபமாகக் கொண்டு வரப்படும்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    அல்லாஹ்வின் பக்கம் முற்றிலும் திரும்பக்கூடிய, (அல்லாஹ்வின் கட்டளைகளை) பேணக்கூடிய எல்லோருக்கும் இது (-சொர்க்கம்) வாக்களிக்கப்படுகிறது.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    ரஹ்மானை எவர் மறைவில் பயந்து (பாவங்களை விட்டு விலகி,) அல்லாஹ்வின் பக்கம் முற்றிலும் திரும்பிய உள்ளத்துடன் வந்தாரோ அவருக்காக (சொர்க்கம் வாக்களிக்கப்படுகிறது).
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    நீங்கள் அதில் (-சொர்க்கத்தில்) பாதுகாப்புடன் நுழையுங்கள்! இதுதான் (முடிவே இல்லாத) நிரந்தர நாள் ஆகும்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    அதில் அவர்களுக்கு அவர்கள் நாடுகின்ற எல்லாம் கிடைக்கும். நம்மிடம் மேலதிகமும் (-அதிகமான, முடிவில்லாத அருட்கொடைகள் அவர்களுக்கு) உண்டு.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    இவர்களுக்கு முன்னர் எத்தனையோ தலைமுறையினரை நாம் அழித்தோம், அவர்கள் இவர்களை விட மிக பலமான விலிமையுள்ளவர்கள். அவர்கள் நகரங்களில் (மூலை முடுக்குகளுக்கெல்லாம்) சுற்றினார்கள். (இருந்தும்) தப்பிக்கும் இடம் ஏதும் (அவர்களுக்கு) இருக்கிறதா?
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    (சிந்திக்கின்ற) உள்ளம் உள்ளவருக்கும் (உள்ளத்தால்) பிரசன்னமாக(வும் சொல்லப்படுவதை கவனிப்பவராகவும்) இருந்து செவிசாய்த்து கேட்பவருக்கும் நிச்சயமாக இதில் நல்லறிவுரை இருக்கிறது.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    திட்டவட்டமாக வானங்களையும் பூமியையும் அவை இரண்டுக்கும் மத்தியில் உள்ளவற்றையும் ஆறு நாள்களில் நாம் படைத்தோம். நமக்கு எவ்வித சோர்வும் (அசதியும், களைப்பும்) ஏற்படவில்லை.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    ஆகவே, (நபியே!) அவர்கள் பேசுகின்றவற்றின் மீது பொறுமையாக இருப்பீராக! சூரியன் உதிப்பதற்கு முன்னரும் மறைவதற்கு முன்னரும் உமது இறைவனை புகழ்ந்து துதிப்பீராக!
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    இரவிலும் தொழுகைகளுக்குப் பிறகும் அவனை துதிப்பீராக!
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    (நபியே!) சமீபமான ஓர் இடத்தில் இருந்து அழைப்பவர் அழைக்கின்ற நாளில் (அந்த அழைப்பை) நீர் செவியுறுவீராக!
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    அவர்கள் உண்மையில் அந்த சப்தத்தை செவியுறுகின்ற நாளில் (தங்கள் புதைக்குழியில் இருந்து வெளியேறுவார்கள்). அதுதான் (படைப்புகள் அனைவரும் கப்ருகளில் இருந்து) வெளியேறுகின்ற நாளாகும்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    நிச்சயமாக நாம்தான் உயிர்ப்பிக்கின்றோம்; மரணிக்க வைக்கின்றோம். இன்னும் நம் பக்கமே (இறுதி) மீளுமிடம் இருக்கின்றது.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    பூமி அவர்களை விட்டும் பிளந்து அவர்கள் (அதிலிருந்து) அதிவிரைவாக வெளியேறுகின்ற நாளில் (அவர்களின் மீளுமிடம் நம் பக்கமே இருக்கின்றது). இது (-மறுமையில் படைப்புகளை ஒன்று சேர்ப்பது) நமக்கு இலகுவான ஒன்று திரட்டல்தான்.
                                                                         
                                                                                                                                        
                    
                                                                                    அவர்கள் கூறுகின்றவற்றை நாம் அதிகம் அறிந்தவர்கள் ஆவோம். (நபியே!) நீர் அவர்களை அடக்கக்கூடியவராக (-கட்டாயப்படுத்துபவராக) இல்லை. ஆகவே, எனது எச்சரிக்கையை பயப்படுகின்றவருக்கு இந்த குர்ஆன் மூலமாக அறிவுரை வழங்குவீராக!