ترجمة سورة القلم

الترجمة التاميلية - عمر شريف
ترجمة معاني سورة القلم باللغة التاميلية من كتاب الترجمة التاميلية - عمر شريف .

உண்மையான நிகழ்வு!
உமது இறைவனின் அருளால் நீர் பைத்தியக்காரராக இல்லை.
நிச்சயமாக உமக்கு முடிவற்ற நற்கூலி உண்டு.
நிச்சயமாக நீர் மகத்தான நற்குணத்தில் இருக்கின்றீர்.
விரைவில் நீரும் காண்பீர், அவர்களும் காண்பார்கள்,
உங்களில் யார் (பைத்தியத்தால்) சோதிக்கப்பட்டவர் என்று.
நிச்சயமாக உமது இறைவன், அவனது பாதையில் இருந்து வழிதவறியவனை அவன் மிக அறிந்தவன் ஆவான். அவன்தான் நேர்வழி பெற்றவர்களையும் மிக அறிந்தவன் ஆவான்.
ஆகவே, (நபியே!) பொய்ப்பிப்பவர்களுக்கு நீர் கீழ்ப்படியாதீர்!
நீர் (அவர்களுடன்) அனுசரித்து போகவேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். அப்படியென்றால் அவர்களும் (உம்மை) அனுசரிப்பார்கள்.
அதிகம் சத்தியம் செய்கின்றவன், அற்பமானவன் எவருக்கும் நீர் கீழ்ப்படியாதீர்!
அதிகம் புறம் பேசுபவன், அதிகம் கோல் சொல்பவன் (எவருக்கும் நீர் கீழ்ப்படியாதீர்!)
நன்மையை அதிகம் தடுப்பவன், வரம்பு மீறிவன், அதிகம் பாவம் செய்பவன் (எவருக்கும் நீர் கீழ்ப்படியாதீர்)!
அசிங்கமானவன், இதற்குப் பிறகு (-மேற்கூறப்பட்ட தன்மைகளுடன் இன்னும் அவன் ஓர்) ஈனன் (இப்படிப்பட்ட எவருக்கும் நீர் கீழ்ப்படியாதீர்)!
செல்வமும் ஆண் பிள்ளைகளும் உடையவனாக அவன் இருந்த காரணத்தால் (அவன் பெருமை அடித்தான்).
அவன் மீது நமது வசனங்கள் ஓதப்பட்டால் (இவை) முன்னோரின் கட்டுக்கதைகள் என்று கூறுகின்றான்.
(அவனுடைய) மூக்கின் மீது நாம் விரைவில் அவனுக்கு அடையாளமிடுவோம்.
நிச்சயமாக நாம் அவர்களை சோதித்தோம் தோட்டமுடையவர்களை நாம் சோதித்தது போல்.“அதிகாலையில் அவர்கள் இருக்கும் போது அதை அவர்கள் நிச்சயமாக அறுவடை செய்ய வேண்டும்” என்று அவர்கள் சத்தியம் செய்த சமயத்தை நினைவு கூருங்கள்!
அல்லாஹ் நாடினால் (இதை செய்வோம்) என்று அவர்கள் கூறவில்லை.
அவர்கள் தூங்கியவர்களாக இருந்த போது உமது இறைவனிடமிருந்து ஒரு கட்டளை அதன் மீது (-அந்த தோட்டத்தின் மீது) இரவில் சுற்றியது.
அது கடுமையான இருள் நிறைந்த இரவைப் போன்று (எரிந்து கருமையாக) ஆகிவிட்டது.
அவர்கள் அதிகாலையில் ஆனவுடன் ஒருவரை ஒருவர் அழைத்தனர்.
நீங்கள் உங்கள் விவசாய நிலத்திற்கு காலையில் செல்லுங்கள் நீங்கள் (உங்கள் தோட்டத்தின் கனிகளை) அறுவடை செய்பவர்களாக இருந்தால்,
அவர்கள் தங்களுக்குள் தாழ்ந்த குரலில் பேசியவர்களாக சென்றனர்.
இன்றைய தினம் உங்களிடம் ஏழை ஒருவரும் அதில் (-அந்த தோட்டத்தில்) நுழைந்து விடக்கூடாது.
அவர்கள் ஒரு கெட்ட எண்ணத்துடன் (தாங்கள் நாடியதை செய்வதற்கு) சக்தி உள்ளவர்களாக காலையில் புறப்பட்டனர்.
அவர்கள் அதைப் பார்த்த போது “நிச்சயமாக நாங்கள் வழிதவறி விட்டோம்.
இல்லை, மாறாக நாங்கள் இழப்பிற்குள்ளாகி விட்டோம்.” என்று கூறினார்கள்.
அவர்களில் நீதவான் கூறினார்: “நீங்கள் இன் ஷா அல்லாஹ் என்று சொல்லி இருக்க வேண்டாமா”என்று நான் உங்களுக்கு கூறவில்லையா?
அவர்கள் கூறினார்கள்: “எங்கள் இறைவன் மிகப் பரிசுத்தமானவன். நிச்சயமாக நாங்கள் அநியாயக்காரர்களாக ஆகிவிட்டோம்.”
அவர்களுக்குள் பழித்தவர்களாக அவர்களில் சிலர் சிலரை முன்னோக்கினர்.
அவர்கள் கூறினார்கள்: “எங்களின் நாசமே! நிச்சயமாக நாங்கள் வரம்பு மீறியவர்களாக இருந்தோம்.”
“எங்கள் இறைவன் எங்களுக்கு அதை விட சிறந்த(தோட்டத்)தை பகரமாக தரக்கூடும். நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவன் பக்கம் ஆசை(யும் ஆதரவும்) உள்ளவர்கள்.
இவ்வாறுதான் (நமது) தண்டனை இருக்கும். மறுமையின் தண்டனை (இதை விட) மிகப் பெரியது ஆகும். அவர்கள் (இதை) அறிந்தவர்களாக இருக்க வேண்டுமே!
நிச்சயமாக இறையச்சம் உள்ளவர்களுக்கு தங்கள் இறைவனிடம் இன்பம் நிறைந்த “நயீம்” சொர்க்கங்கள் உள்ளன.
(நமது கட்டளைக்கு) முற்றிலும் பணிந்தவர்களை (-முஸ்லிம்களை), (நமது கட்டளையை மீறுகின்ற) குற்றவாளிகளைப் போல் ஆக்குவோமா?
உங்களுக்கு என்ன ஆனது எப்படி நீங்கள் தீர்ப்பளிக்கின்றீர்கள்.
(நல்லவர்களையும் பாவிகளையும் ஒரு சமமாக நீங்கள் கருதுவதற்கு ஆதாரமாக) உங்களுக்கு (இறைவனின்) வேதம் ஏதும் இருக்கின்றதா? அதில் நீங்கள் (இப்படித்தான்) படிக்கின்றீர்களா?
(அப்படியென்றால்,) “நிச்சயமாக உங்களுக்கு அதில் நீங்கள் விரும்புவதெல்லாம் உண்டா?”
நிச்சயமாக நீங்கள் (விரும்பியபடி) தீர்ப்பளிப்பதெல்லாம் உங்களுக்கு கிடைத்துவிடும் என்பதற்கு மறுமை நாள் வரை நீடித்து இருக்கின்ற உறுதியான ஒப்பந்தங்கள் (ஏதும்) உங்களுக்கு நம்மிடம் உண்டா? (உங்களுக்கும் நமக்கும் மத்தியில் அப்படி ஏதாவது ஒப்பந்தம் இருக்கிறதா?)
(நபியே!) அவர்களிடம் கேட்பீராக! அவர்களில் யார் இதற்கு பொறுப்பாளர் ஆவார்?
(இவர்களின் கூற்றைப் போன்றே கூறுகின்ற) கூட்டாளிகள் (வேறு யாரும்) இவர்களுக்கு உண்டா? அப்படி இருந்தால் அவர்களின் அந்த கூட்டாளிகளை (தங்கள் சாட்சிகளாக நம்மிடம்) அவர்கள் கொண்டு வரட்டும், அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால்.
கெண்டைக்காலை விட்டும் அகற்றப்படுகின்ற நாளில் (-கடுமையான சோதனை நிகழ்கின்ற நாளில் அவர்களை அவர்கள் கொண்டு வரட்டும்). இன்னும், அவர்கள் சிரம்பணிய அழைக்கப்படுவார்கள். ஆனால், அவர்கள் (சிரம் பணிவதற்கு) சக்தி பெற மாட்டார்கள்.
அவர்களின் பார்வைகள் தாழ்ந்து இருக்கும். அவர்களை இழிவு சூழும். அவர்கள் (உலகத்தில் வாழ்ந்தபோது,) அவர்கள் சுகமானவர்களாக இருந்த போது தொழுகைக்கு அழைக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள். (ஆனால் அப்போது அவர்கள் தொழவில்லை, அல்லது பிறருக்கு காண்பிப்பதற்காக மட்டும் தொழுதார்கள்.)
என்னையும் இந்த வேதத்தை பொய்ப்பிப்பவர்களையும் விட்டுவிடுவீராக! நாம் அவர்களை அவர்கள் அறியாத விதத்தில் கொஞ்சம் கொஞ்சமாகப்பிடிப்போம்.
இன்னும் அவர்களுக்கு நாம் தவணை அளிப்போம். நிச்சயமாக எனது சூழ்ச்சி மிக பலமானது.
(நபியே!) இவர்களிடம் கூலி ஏதும் நீர் கேட்கின்றீரா? (அதனுடைய) கடனால் அவர்கள் சிரமப்படுகிறார்களா?
அவர்களிடம் மறைவானவை இருக்கின்றதா? (அதிலிருந்து தங்களுக்கு விருப்பமானதை) அவர்கள் எழுதுகின்றனரா? (முஃமின்களை விட நிராகரிப்பாளர்கள்தான் சிறந்தவர்கள் என்று அவர்கள் எண்ணுவது போல.)
(நபியே!) உமது இறைவனின் தீர்ப்பிற்காக நீர் பொறுமை காப்பீராக! மீனுடையவரைப் போல் (அவர் தனது மக்கள் மீது கோபப்பட்டது போல்) நீர் ஆகிவிடாதீர், அவர் (தனது மக்களை) அழைத்த நேரத்தில், அவர் கடும் கோபமுடையவராக இருந்தார்.
அவருடைய இறைவனிடமிருந்து அருள் அவரை அடைந்திருக்காவிட்டால் (பயங்கரமான) ஒரு பெருவெளியில் அவர் எறியப்பட்டிருப்பார். அவர் (தனது செயலினால்) பழிப்பிற்குரியவராகத்தான் இருந்தார்.
பிறகு, அவரை அவரது இறைவன் தேர்ந்தெடுத்தான். இன்னும் அவரை நல்லவர்களில் ஆக்கினான்.
நிச்சயமாக நிராகரித்தவர்கள் தங்கள் (தீய) பார்வைகளால் உம்மை (உமது இடத்தில் இருந்து) நீக்கிவிட நெருங்கினார்கள், (இந்த வேத) அறிவுரையை செவியுற்ற போது. இன்னும் அவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக அவர் ஒரு பைத்தியக்காரர்தான்”
அது (-அந்த குர்ஆன்) அகிலத்தார்களுக்கு ஓர் அறிவுரையே தவிரவேறில்லை.
Icon