63. ஆகவே, நாம் மூஸாவை நோக்கி ‘‘ நீர் உமது தடியினால் இந்தக் கடலை அடிப்பீராக'' என வஹ்யி அறிவித்தோம். (அவர் அடிக்கவே) அது (பல வழிகளாகப்) பிளந்துவிட்டது. ஒவ்வொரு பிளவும் பெரும் மலைகளைப்போல் இருந்தது.
الترجمة التاميلية
فَأَوۡحَيۡنَآ إِلَىٰ مُوسَىٰٓ أَنِ ٱضۡرِب بِّعَصَاكَ ٱلۡبَحۡرَۖ فَٱنفَلَقَ فَكَانَ كُلُّ فِرۡقٖ كَٱلطَّوۡدِ ٱلۡعَظِيمِ
உம் கைத்தடியினால் இந்தக் கடலை நீர் அடியும்" என்று மூஸாவுக்கு வஹீ அறிவித்தோம். (அவ்வாறு அடித்ததும் கடல்) பிளந்தது (பிளவுண்ட) ஒவ்வொரு பகுதியும் பெரும் மலை போன்று ஆகிவிட்டது.
Jan Trust Foundation - Tamil translation
ஆகவே, “உமது தடியைக் கொண்டு கடலை அடிப்பீராக!” என்று மூசாவிற்கு நாம் வஹ்யி அறிவித்தோம். ஆக, அது பிளந்தது. ஒவ்வொரு பிளவும் பெரிய மலைப் போன்று இருந்தது.
الترجمة التاميلية - عمر شريف